Enable Javscript for better performance
காங்கிரஸ்-மஜத கூட்டணி தொடருமா?: குமாரசாமி விளக்கம்- Dinamani

சுடச்சுட

    
    KUMARASAMY


    கர்நாடகத்தில் காங்கிரஸுடன் மஜதவின் கூட்டணி தொடருமா?  என்பது எனக்குத் தெரியாது என்று காபந்து முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.
     பெங்களூரு, மஜத அலுவலகத்தில் புதன்கிழமை மஜத எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு முன்பாக, செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  மஜத-வின் எதிர்காலச் செயல்பாடுகளை தீர்மானிப்பதற்காக மஜத எம்எல்ஏக்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.  மஜத-வை வளர்த்தெடுப்பதே எங்கள் முன்னால் இருக்கும் பெரும் சவால். கர்நாடக மக்களின் நம்பிக்கையைப் பெற்று,  இந்தச் சூழ்நிலையைக் கடந்து மஜத-வை வளர்ப்பதுதான் எங்களது இப்போதைய கவலை. இதுகுறித்து விவாதிக்க இருக்கிறோம். காங்கிரசுடன் மஜதவின் கூட்டணி தொடருமா? என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. எதிர்காலம் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடர்வது குறித்து இதுவரை நாங்கள் எதையும் பேசவில்லை என்றார் குமாரசாமி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai