Enable Javscript for better performance
காஷ்மீரில் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைவது 40% குறைந்துள்ளது- Dinamani

சுடச்சுட

    

    காஷ்மீரில் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைவது 40% குறைந்துள்ளது

    By DIN  |   Published on : 25th July 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் இணைவது 40 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    இது தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய உள்துறை இணையமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி புதன்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ள
    தாவது:
    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டி ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குல் நடத்துவது, கடந்த ஆண்டின் முதல் 6 மாதங்களை ஒப்பிடுகையில் நிகழாண்டில் 43 சதவீதம் குறைந்துள்ளது. இதே காலகட்டத்தில், பயங்கரவாத அமைப்புகளில் இளைஞர்கள் இணைவது 40 சதவீதம் குறைந்துள்ளது. பயங்கரவாத நடவடிக்கைகள் 22 சதவீதம் குறைந்துள்ளன.
    பயங்கரவாதத்துக்கு எதிராகவும், தேசவிரோதிகளுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. பாதுகாப்புப் படைகள் வலிமைப்படுத்தப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் நாட்டில் இடதுசாரி தீவிரவாதம் பெருமளவில் குறைந்துள்ளது.
    கடந்த 2018-ஆம் ஆண்டு, நாட்டிலுள்ள 60 மாவட்டங்களில் மட்டுமே நக்ஸல் தீவிரவாதச் செயல்கள் நிகழ்த்தப்பட்டன. அதிலும், 10 மாவட்டங்களில் மட்டுமே பெரும்பான்மையான தீவிரவாதச் செயல்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த மாவட்டங்களில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரூ.1,000 கோடி சிறப்பு நிதியை மத்திய அரசு ஆண்டுதோறும் ஒதுக்கிவருகிறது. 
    நாட்டில் நக்ஸல் தீவிரவாதச் சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த 2009 முதல் 2014 வரையிலான காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், கடந்த 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 43 சதவீதம் குறைந்துள்ளது என்று அந்த பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    இனக் கலவரங்கள் குறைவு: மற்றொரு கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் ஜி.கிஷண் ரெட்டி கூறியுள்ளதாவது:
    நாட்டில் இனக் கலவரங்கள் குறைந்துள்ளன. கடந்த 2013-ஆம் ஆண்டு 823 இனக் கலவரங்கள் ஏற்பட்டிருந்தன. இது கடந்த ஆண்டு 708-ஆகக் குறைந்துள்ளது. முன்பு இனக் கலவரங்கள் தொடர்பான விவரங்களை மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் உளவுத்துறையே (ஐ.பி.) பதிவு செய்து வந்தது; இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு வந்ததால், கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் அவற்றைப் பதிவு செய்து வருகிறது.
    காவல் துறை என்பது மாநிலக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், இனக் கலவரங்களைத் தடுக்கும் பொறுப்பும், அவற்றைப் பதிவு செய்யும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமே உள்ளன. இருந்தபோதிலும், மாநிலங்களில் சட்டம்-ஒழுங்கைக் காக்கும் நோக்கில், மத்திய அரசு அவ்வப்போது தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.
    பொதுவான நோக்கமில்லை: பல மாநிலங்களில் பல்வேறு சமயங்களில் நிகழ்த்தப்பட்ட கும்பல் தாக்குதல்களுக்குப் பொதுவான நோக்கங்கள் எதுவும் இல்லை என்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது. 
    திரிபுரா, மேற்கு வங்கம், கேரளம் உள்ளிட்ட வெவ்வேறு அரசியல் தலைமைகள் காணப்படும் மாநிலங்களில் கூட கும்பல் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன என்று அந்த பதிலில் ஜி.கிஷண் ரெட்டி குறிப்பிட்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai