Enable Javscript for better performance
குடியரசுத் தலைவரின் செயலருக்கு 3 ஆண்டுகள் பணிநீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    குடியரசுத் தலைவரின் செயலருக்கு 3 ஆண்டுகள் பணிநீட்டிப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 01:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    sanjay-kothari


    குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் செயலர் சஞ்சய் கோத்தாரிக்கு 3 ஆண்டுகள் பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
    இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான கேபினட் குழு புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் செயலராக உள்ள சஞ்சய் கோத்தாரியின் பணிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது. 
    குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் வரும் 2022-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி நிறைவடைய உள்ளது. அதுவரை, அவரது செயலராக கோத்தாரி பணியாற்றுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    ஹரியாணாவைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியான சஞ்சய் கோத்தாரி, கடந்த 2016-ஆம் ஆண்டு பணிஓய்வு பெற்றார். 
    அதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் செயலராக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். அவரது பணிக்காலம் புதன்கிழமையோடு நிறைவடைய இருந்த நிலையில், அதை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai