Enable Javscript for better performance
ஜாகிர் நாயக்கின் உரைகளால் ஈர்க்கப்பட்டு பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்- Dinamani

சுடச்சுட

    

    ஜாகிர் நாயக்கின் உரைகளால் ஈர்க்கப்பட்டு பயங்கரவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

    By DIN  |   Published on : 25th July 2019 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக மகாராஷ்டிரத்தில் கைது செய்யப்பட்டவர்கள், சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் உரைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
    மகாராஷ்டிரத்தில் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, அந்த மாநிலத்தின் ஒளரங்காபாத் மற்றும் தாணே பகுதிகளில் கடந்த ஜனவரி மாதம் மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின்போது, உம்மாத்-இ-முகம்மதியா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தக் குழுவானது, முக்கிய கூட்டங்கள் நடைபெறும் இடங்களில் பெரிய அளவில் ரசாயனத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.  அவர்களுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், இந்த மாதத் தொடக்கத்தில் மும்பை நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
    அந்தக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளதாவது:
    சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் புகைப்படங்கள் மற்றும் அவரது உரைகள் அடங்கிய விடியோக்கள்,  கைது செய்யப்பட்டவர்களின் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தன. அவர்கள், ஜாகிர் நாயக்கின் உரைகள் மற்றும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பால் ஈர்க்கப்பட்டு பயங்கரவாத அமைப்பைத் தொடங்கியுள்ளனர். மும்ப்ரா பகுதியில் உள்ள கோயிலில் வழங்கப்படும் பிரசாதத்தில் விஷத்தை கலப்பதற்கு முயற்சித்துள்ளனர். வெடிபொருள்கள் மற்றும் விஷம் தயாரிக்கவும் அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 
    வெடிபொருள்கள் தயாரிப்பது குறித்து இணையதளத்தில் இருந்து அவர்கள் கற்றுள்ளனர். இந்த பயங்கரவாதக் குழுவின் தலைவரான அபு ஹம்சா, மும்ப்ரா நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள மலைப் பகுதிகளில் குண்டுவெடிப்புகளை நடத்த பயிற்சி பெற்றார் என்று அந்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai