Enable Javscript for better performance
தலைமையின் அனுமதிக்கு காத்திருக்கிறேன்: பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா- Dinamani

சுடச்சுட

    

    தலைமையின் அனுமதிக்கு காத்திருக்கிறேன்: பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா

    By DIN  |   Published on : 25th July 2019 05:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ediyurappa


    கர்நாடகத்தில் அரசு அமைக்க தேசியத் தலைமையின் அனுமதிக்காக காத்திருக்கிறேன் என்று பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
    கர்நாடக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு வீழ்ந்தது. இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தலைமையில் பாஜக ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. 
    இதனிடையே,  பெங்களூரு சாமராஜ்பேட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்துக்கு புதன்கிழமை வந்த எடியூரப்பா,  அங்கு ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

     இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியது: 
     அரசு அமைப்பது குறித்து தில்லியில் இருந்து தேசியத் தலைமையின் அனுமதிக்காகக் காத்திருக்கிறேன். எந்த நேரத்திலும் நான் பாஜக சட்டப்பேரவைக் குழுக் கூட்டத்தைக் கூட்ட முடியும்.  மேலும்,  அதன் முடிவில் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆட்சி அமைக்க ஆளுநரிடம் கேட்க முடியும். 
    ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஆசி மற்றும் ஒத்துழைப்பால்தான் வட்ட அளவில் இருந்து மாநில அளவிலான தலைவராக உயர்ந்து, முதல்வராகப் பொறுப்பேற்க முடிந்தது. அடுத்தகட்ட நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முன்பாக, ஆர்எஸ்எஸ் தலைவர்களின் ஆசியைப் பெறுவதற்காக வந்துள்ளேன் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai