Enable Javscript for better performance
பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்பு: மத்திய அமைச்சர்கள் குழு மாற்றியமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    பணியிடங்களில் பாலியல் தொல்லை தடுப்பு: மத்திய அமைச்சர்கள் குழு மாற்றியமைப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைத் தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளை வலுப்படுத்துவது குறித்து ஆராயும் மத்திய அமைச்சர்கள் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
    இக்குழுவில், மத்திய உள்துறை அமைச்சராக ஏற்கெனவே பதவி வகித்த ராஜ்நாத் சிங்கிற்கு பதிலாக, தற்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா இடம்பெற்றுள்ளார். அத்துடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
    பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களை தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளை வலுப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்காக மத்திய அமைச்சர்கள் குழு கடந்த 2018-இல் அமைக்கப்பட்டது. அப்போது, இந்தக் குழுவில் ராஜ்நாத் சிங் தவிர, முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.
    தற்போது மாற்றியமைக்கப்பட்டிருக்கும் இக்குழு, அனைத்து தரப்பினருடனும் ஆலோசனை நடத்துவதோடு, மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற யோசனைகளைப் பரிசீலிக்கவும் உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai