Enable Javscript for better performance
பிகார், அஸ்ஸாம், உ.பி.யில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234-ஆக அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பிகார், அஸ்ஸாம், உ.பி.யில் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234-ஆக அதிகரிப்பு

    By DIN  |   Published on : 25th July 2019 02:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    பிகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் மழை-வெள்ளத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 234-ஆக அதிகரித்துள்ளது.
    வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. பிகாரில் தொடர் கனமழை காரணமாக, பல்வேறு மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள ஒளரங்காபாத், கிழக்கு சாம்பரன், பாகல்பூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் இதுவரை மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 123-ஆக அதிகரித்துள்ளது.
    வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சுமார் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 3,000 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை-வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 74-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முறையே 23, 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai