Enable Javscript for better performance
ம.பி. ஆளுநராக 29-இல் பதவியேற்கிறார் லால்ஜி- Dinamani

சுடச்சுட

    


    மத்தியப் பிரதேச மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட லால்ஜி தாண்டன், வரும் 29-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.
    இதுதொடர்பாக மத்தியப் பிரதேச ஆளுநர் மாளிகை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை கூறுகையில், தற்போது பிகார் மாநில ஆளுநராக உள்ள லால்ஜி தாண்டன்,  வரும் 28-ஆம் தேதி போபாலுக்கு வரவிருக்கிறார். ஆளுநர் மாளிகையில் 29-ஆம் தேதி காலை நடைபெறும் விழாவில், அவருக்கு மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி (பொறுப்பு) ரவிசங்கர் ஜா பதவி பிரமாணம் செய்து வைக்கவுள்ளார் என்றார்.
    ம.பி. ஆளுநராக இருந்த ஆனந்திபென் படேல், உத்தரப் பிரதேச ஆளுநராக மாற்றப்பட்டார். அவரது இடத்துக்கு லால்ஜி தாண்டன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai