Enable Javscript for better performance
மலேசியா-திருப்பதி விமான சேவை விரைவில் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    


    மலேசியா-திருப்பதி இடையே புதிய விமான சேவை விரைவில் தொடங்க அந்நாட்டு வியாபார நிறுவனம் திருப்பதி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டது.
    திருப்பதி விமான நிலையம் தற்போது பன்னாட்டு விமான நிலையமாக மாற்றப்பட்டு வருகிறது. தற்போது உள்நாடு மட்டுமல்லாமல் பன்னாட்டு விமானங்களும் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மலேசியா-திருப்பதி இடையே விமான சேவை தொடங்க அந்நாட்டு வியாபார நிறுவனம் முடிவு செய்தது. அக்குழுவினர் செவ்வாய்க்கிழமை ஏழுமலையானைத் தரிசித்தனர். தரிசனம் முடித்த பின் அவர்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்தினர்.
    அதில் விமான ஓடுதளம்,  கஸ்டம்ஸ்,  வெளிநாட்டு பயணிகளுக்கு அளித்து வரும் சேவைகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்ட நிறைவுக்கு பின் அவர்கள் கூறியதாவது:  மலேசியாவிலிருந்து சென்னை,  திருச்சிக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 
    திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க மலேசியாவிலிருந்து 40 முதல் 60 சதவீத மக்கள் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்த புதிய விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டது. திருச்சி வரும் வரை விமானங்களைத் திருப்பதி வரை நீட்டிப்பதா? அல்லது திருப்பதிக்கு புதிய விமான சேவை தொடங்குவதா? என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அடுத்த வாரம் ஆந்திர முதல்வருடன் கலந்துரையாடி, அவர்கள் அளிக்கும் மானியம் குறித்த விவரங்களை முடிவு செய்து ஆகஸ்ட் இறுதி வாரத்திலிருந்து மலேசியா-திருப்பதி இடையே விமான சேவை தொடங்க முடிவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai