Enable Javscript for better performance
மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றும் திட்டம் இல்லை: மத்திய அரசு- Dinamani

சுடச்சுட

    

    மேற்கு வங்கத்தின் பெயரை மாற்றும் திட்டம் இல்லை: மத்திய அரசு

    By DIN  |   Published on : 25th July 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
    மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்விநேரத்தின்போது, மேற்கு வங்க அரசின் பெயர் மாற்றக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது ஏன் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அளித்த பதில்:
    அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டால்தான் மாநிலத்தின் பெயர் மாற்றம் செய்ய முடியும். அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை.
    அத்துடன், பங்களா என்ற பெயர் பங்களாதேஷ் (வங்கதேசம்) நாட்டைக் குறிப்பிடுவது போல் உள்ளது. 
    கிராமங்கள், நகரங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டுமானால், மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் உள்துறை அமைச்சகத்திடம் ஆட்சேபணை இல்லா சான்றிதழைப் பெற வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் ஏற்கெனவே அமலில் உள்ளன என்று நித்யானந்த் ராய் தெரிவித்தார்.
    இதனிடையே, பயங்கரவாதத் தாக்குதல்கள், மதக் கலவரங்கள் ஆகியவற்றில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பத்தினருக்கு அளிப்பதற்காக மாநில அரசுகளுக்கு ரூ.18 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai