Enable Javscript for better performance
254 புதிய நிறுவனங்களுக்கு ரூ.1,700 கோடி: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்- Dinamani

சுடச்சுட

    

    254 புதிய நிறுவனங்களுக்கு ரூ.1,700 கோடி: மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல்

    By DIN  |   Published on : 25th July 2019 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    puys-goyal


    நாட்டில் 254 புதிய நிறுவனங்களுக்கு செபி அமைப்பின் பதிவு செய்யப்பட்ட மாற்று முதலீட்டு நிதியிலிருந்து (ஏஐஎஃப்) ரூ.1,700 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
    இதுதொடர்பாக மக்களவையில் புதன்கிழமை அவர் கூறியதாவது:
    புதிய நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதற்காக எஃப்எஃப்எஸ் என்ற அமைப்பை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. அதற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    இந்த அமைப்பை இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி (எஸ்ஐடிபிஐ) நிர்வகிக்கிறது. தொழில் ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை கண்காணிப்பு அமைப்பாக செயல்பட்டு வருகிறது.
    கடந்த 10ஆம் தேதி நிலவரப்படி, 47 மாற்று முதலீட்டு நிதிக்கு எஸ்ஐடிபிஐ அமைப்பு ரூ.3,123 கோடி அளித்துள்ளது என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai