தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு: மருத்துவர்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்? 

தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு: மருத்துவர்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தம்? 

புது தில்லி: தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமையன்று  நிறைவேறியது.

63 ஆண்டுகால இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956-க்கு மாற்றாக கொண்டு வரப்படும் இந்த மசோதாவை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் மக்களவையில் கடந்த திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த மசோதாவின் படி, இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் கொண்டுவரப்படும். அந்த ஆணையத்துக்கு பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதற்காக மருத்துவ ஆலோசனைக் குழு அமைக்கப்படும். 

தேசிய மருத்துவ ஆணையத்தில் மொத்தம் 29 பேர் உறுப்பினர்களாக இருப்பர். அதில் 20 பேர் நேரடியாக நியமனம் செய்யப்படுவதுடன், 9 பேர் தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

தேசிய மருத்துவ ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் தர அளவை அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட தர நிபந்தனைகளை பூர்த்தி செய்து, இயங்குவதற்கான அனுமதியை ஒரு மருத்துவக் கல்லூரி பெறும் பட்சத்தில் ஆண்டுதோறும் அவை தங்களுக்கான அனுமதியை புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தேவை இருக்காது என மத்திய அரசு நம்புகிறது.

இந்த நிலையில் மசோதாவின் பேரில் நடந்தஹ் ஓட்டெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 268 பேரும், எதிராக 48 பேரும் வாக்களித்துள்ளனர். இந்த மசோதாவில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த திருத்தங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை. இதையடுத்து, மசோதா நிறைவேறுவதற்கு முன், காங்கிரஸ் உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்த மசோதா குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் பதிலளிக்கையில், "இந்த மசோதா மருத்துவ கல்வியின் தரத்தை உயர்த்தும். மருத்துவ கல்வியில் இது மிக முக்கியமான சீர்த்திருத்தம்" என்றார்.

இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவர்கள் நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவர்கள் சங்கத்தின் தலைவரான ராஜன் ஷர்மா, "தேசிய மருத்துவ ஆணையமானது பணக்காரர்களுக்கு ஆதரவாக அமைந்திருப்பதோடு, ஊழலுக்கும் வழி வகுக்கிறது. எனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம்" என்று கூறியுள்ளார்.     

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com