மாநிலத் தலைவர் ஆகிறாரா நவ்ஜோத் சிங் சித்து?

பஞ்சாப் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரஸ் கட்சியின் தில்லி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
மாநிலத் தலைவர் ஆகிறாரா நவ்ஜோத் சிங் சித்து?


பஞ்சாப் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த நவ்ஜோத் சிங் சித்து, காங்கிரஸ் கட்சியின் தில்லி மாநிலத் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தில்லியில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தற்போதே அதற்கான பிரசாரங்களை மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் காங்கிரஸின் தில்லி மாநிலத் தலைவர் ஷீலா தீட்சித் அண்மையில் காலமானார். இதனால், அங்கு விரைவில் அடுத்த மாநிலத் தலைவரை நியமிக்க வேண்டிய நிர்பந்தம் காங்கிரஸுக்கு உள்ளது.

இதனிடையே முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து முதல்வர் அமரீந்தர் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக அண்மையில் அறிவித்தார். பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் அவரது ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டார். எனினும், அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தாலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தில்லி மாநிலத் தலைவராக நவ்ஜோத் சிங் சித்து நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, சித்துவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கையில், 

"சில நாட்களுக்கு முன் நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வதேராவைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவருக்கு காங்கிரஸின் தில்லி மாநிலத் தலைவர் பதவி புதிதாக வழங்கப்படவுள்ளதாகவும், இதுகுறித்து ஆலோசித்து முடிவெடுக்க அவருக்கு நேரம் வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், தனது புதிய பொறுப்புக்குத் தயார் என்று நவ்ஜோத் சிங் சித்து கட்சி மேலிடத்தில் தெரிவித்துள்ளார்" என்றார்.  

இதன்மூலம், தில்லி மாநிலத் தலைவர் குறித்து அறிவிப்பை காங்கிரஸிடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com