Enable Javscript for better performance
அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்கள் 7 பேர் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்க ஸ்பெல்லிங் பீ போட்டி: இந்திய வம்சாவளி மாணவர்கள் 7 பேர் வெற்றி

    By DIN  |   Published on : 01st June 2019 01:14 AM  |   அ+அ அ-   |    |  


    அமெரிக்காவின் மேரிலாண்டில் தேசிய அளவில் நடைபெற்ற ஸ்பெல்லிங் பீ எனப்படும் சொல்லுக்கான எழுத்துக்களை தெரிவிக்கும் போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர்கள் 7 பேரும்,  அமெரிக்க மாணவர் ஒருவரும் பெற்றி பெற்றுள்ளனர். 
    இந்த போட்டியில் அமெரிக்கா உள்பட பல நாடுகளில் இருந்து 7-14 வயதுக்குள்பட்ட 565 மாணவர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் மற்ற அனைவரையும் தோற்கடித்து 6 மாணவர்களும், 2 மாணவிகளும் முதலிடம் பிடித்துள்ளனர்.
    இந்த போட்டி தொடங்கி 94 ஆண்டுகளில் ஆன நிலையில், முதல் முறையாக இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 
    வெற்றி பெற்ற 8 பேருக்கும் தனித்தனியே ரூ. 34 லட்சம் ரொக்கமும், பல பரிசு பொருள்களும் வழங்கப்பட்டன.
    இதுதொடர்பாக அந்த போட்டியின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ரிஷிக் காந்தஸ்ரீ(13), மேரிலாண்டைச் சேர்ந்த சாகேத் சுந்தர்(13), நியூ ஜெர்சியைச் சேர்ந்த ஸ்ருதிகா பாதே(13), கிரிஸ்டோபர் செர்ராவ்(13), டெக்டாஸ் பகுதியைச் சேர்ந்த சோஹம் சுக்டான்கர்(13), அபிஜெய் கோடலி(12), ரோஹன் ராஜா(13) ஆகிய இந்திய வம்சாவளி மாணவர்களும், அமெரிக்காவைச் சேர்ந்த எரின் ஹார்வர்ட்(14)  என்ற மாணவரும் இந்த போட்டியின் இறுதி சுற்றில் பங்கேற்றனர். அவர்களுக்கு தொடர்ந்து 5 சுற்றுகள் கடினமான வார்த்தைகள் அளிக்கப்பட்டது. எனினும், அனைத்து சுற்றிலும் அவர்கள் அனைவரும் சரியான பதிலை அளித்தனர். 
    அதனால், இதுவரை இல்லாத முறையாக, போட்டியில் 8 பேருக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது என்றார்.
    கடந்த ஆண்டு ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற ஸ்பெல்லிங் பீ போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் கார்த்திக் நெம்மேனி பெற்றி பெற்றார். 
    இந்தப் போட்டியில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக இந்திய வம்சாவளி மாணவர்கள் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 
     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    flipboard facebook twitter whatsapp