Enable Javscript for better performance
கடற்படை தளபதியாக கரம்வீர் சிங் பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கடற்படை தளபதியாக கரம்வீர் சிங் பதவியேற்பு

    By DIN  |   Published on : 01st June 2019 01:27 AM  |   அ+அ அ-   |    |  

    karamveer

    கடற்படையின் புதிய தலைமை தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டதன் அடையாளமாக, முன்னாள் கடற்படை தலைமை தளபதி சுனில் லாம்பாவிடம் இருந்து வெள்ளிக்கிழமை செங்கோலைப் பெற்றுக் கொள்ளும் கரம்வீர் சிங்


    கடற்படையின் புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கரம்வீர் சிங் வெள்ளிக்கிழமை பதவியேற்றார். இதையடுத்து, தலைமை தளபதியாக பொறுப்பேற்ற முதல் ஹெலிகாப்டர் போர் விமானி என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
    கடற்படை தலைமைத் தளபதி சுனில் லாம்பாவின் பதவிக் காலம் மே 31-ஆம் தேதியோடு நிறைவடைவதையடுத்து, புதிய தளபதியாக அட்மிரல் கரம்வீர் சிங்  கடந்த ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். இந்த முறை, இதுவரை பின்பற்றப்பட்ட  பணி மூப்பின் அடிப்படையில் இல்லாமல், தகுதியின் அடிப்படையில் நியமனம் மேற்கொள்ளப்பட்டது. வரும் 2021-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை கரம்வீர் தலைமை தளபதியாக பொறுப்பு வகிக்கவுள்ளார்.
    கடற்படையில் கடந்த 1980-ஆம் ஆண்டு இணைந்த  கரம்வீர் சிங், அதற்கு அடுத்த ஆண்டு ஹெலிகாப்டர் போர் விமானியாக நியமிக்கப்பட்டார். பணியில் இருந்த கடந்த 39 ஆண்டுகளில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை கரம்வீர் சிங் வகித்துள்ளார். 
    தலைமை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் கிழக்கு மண்டலத்தின் கடற்படை தளபதியாக பொறுப்பு வகித்து வந்தார். 
    இவரது பதவிக் காலத்தில் கடற்படையில் நவீனமயமாக்கலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடற்படையில்  புதிதாக போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள் ஆகியவை இணைக்கப்படும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.
    முன்னதாக, கரம்வீர் சிங் நியமனத்துக்கு எதிராக, பாதுகாப்புப் படையினர் குறைதீர்ப்பு தீர்ப்பாயத்தில் கரம்வீர் சிங்கைவிட  மூத்த அதிகாரியான அந்தமான் நிகோபார் மண்டல கடற்படை தளபதி விமல் வர்மா வழக்கு தொடர்ந்தார். கரம்வீர் சிங்கின் நியமனம் அந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்குள்பட்டது என்று தீர்ப்பளித்த தீர்ப்பாயம் தலைமை தளபதியாக கரம்வீர் சிங் பதவியேற்க அனுமதி வழங்கியது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூலை 17-ஆம் தேதி நடைபெற உள்ளது.

     

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp