நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து; பின் ட்விட்டரில் இருந்து விலகல்: கேள்விகளை எழுப்பும் காங்கிரசைச் சேர்ந்த நடிகை 

மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த பின்னர், காங்கிரசின் சமூகஊடகப் பிரிவு தலைவரான முன்னாள் நடிகை ட்விட்டரில் இருந்து விலகியுள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது.
நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து; பின் ட்விட்டரில் இருந்து விலகல்: கேள்விகளை எழுப்பும் காங்கிரசைச் சேர்ந்த நடிகை 

பெங்களூரு: மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த பின்னர், காங்கிரசின் சமூகஊடகப் பிரிவு தலைவரான முன்னாள் நடிகை ட்விட்டரில் இருந்து விலகியுள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று பாஜக இரண்டாவது தடவையாக பதவியேற்றுக் கொண்டது. மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த வியாழனன்று பொறுப்பேற்றுக் கொண்டது, இதில் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து  வருகின்றனர்

இந்நிலையில் மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்த பின்னர், காங்கிரசின் சமூகஊடகப் பிரிவு தலைவரான முன்னாள் நடிகை ட்விட்டரில் இருந்து விலகியுள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சமூகஊடகப் பிரிவு தலைவராக இருப்பவர் முன்னாள் நடிகை திவ்யா ஸ்பந்தனா. நிர்மலா சீதாராமனை வாழ்த்தி அவர் ட்விட்டரில் பதிவு செய்தகாவது:

1970-ம் ஆண்டுக்குபின்னர் நிதித்துறைக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் அமைச்சரான உங்களுக்கு வாழ்த்துக்கள். நாட்டின பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இல்லை. அதை மேம்படுத்துவீர்கள் என்று நம்புகிறேன். எங்களால் முடிந்த ஒத்துழைப்பு அளிப்போம்.

இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் திவ்யா தற்போது ட்விட்டரில் இருந்து விலகியுள்ளார். திவ்யா ஸ்பந்தனாவின் கணக்கைத் தேடினால் அவரது ட்விட்டர் கணக்கு செயல்பாட்டில் இல்லை என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திவ்யா ஸ்பந்தனா விலகளுக்கு என காரணம் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

முன்னதாக ஒரு மாதத்துக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் தொலைக்காட்சிகளில் விவாதங்களில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்ட செய்தியை காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்திருந்தார். தற்போது திவ்யா ஸ்பந்தனாவின் விலகல் நிறைய சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com