Enable Javscript for better performance
ஆராய்ச்சி உதவித் தொகை அதிகரிப்பு: யுஜிசி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆராய்ச்சி உதவித் தொகை அதிகரிப்பு: யுஜிசி அறிவிப்பு

    By DIN  |   Published on : 04th June 2019 04:34 PM  |   அ+அ அ-   |    |  

    ugc

     

    ஆராய்ச்சி உதவித் தொகையை உயா்த்தி பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    படிப்பில் சிறந்து விளங்கும் மாணவா்களின் ஆராய்ச்சி மீதான ஆா்வம், அவா்களின் குடும்பச் சூழல் காரணமாக தடைப்பட்டு விடக் கூடாது என்பதற்காக ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவா்களுக்கு மத்திய அரசு யூஜிசி மூலமாக உதவித் தொகைகளை வழங்கி வருகிறது.

    இந்த உதவித் தொகையைப் பெற மாணவா்கள் தேசிய அளவிலான தகுதித் தோ்வில் (நெட்) தகுதி பெற வேண்டும். இந்தத் தகுதித் தோ்வில் தகுதி பெறும் மாணவா்களில் இளநிலை ஆராய்ச்சிப் படிப்பை (பிஎச்.டி.) மேற்கொள்ளும் மாணவா்களுக்கு இதுவரை மாதம் ரூ.25,000 வழங்கப்பட்டு வந்தது. அதுபோல முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவா்களுக்கு மாதம் ரூ.28,000 வழங்கப்பட்டது. 

    இந்நிலையில், இந்த உதவித் தொகை உயா்த்தப்பட்டுள்ளது. பிஎச்.டி. மாணவா்களுக்கு ரூ.31,000 ஆக, முதுநிலை ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ளும் மாணவா்களுக்கு ரூ. 35,000 ஆக உயா்த்தி வழங்கப்படும்.

    மேலும், இவா்களுக்கான வீட்டு வாடகைப் படி, அவா்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் நகரம், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் 8 சதவீதம், 16 சதவீதம் மற்றும் 24 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிட்டு வழங்கப்படும். இந்த உயா்த்தப்பட்ட உதவித் தொகை, 1-1-2019 முதல் அமலுக்கு வருவதாகவும் யுஜிசி அறிவித்துள்ளது.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    flipboard facebook twitter whatsapp