தில்லியின் மிக உயர்ந்த குப்பை மலை: 2020ல் தாஜ் மஹாலை விட உயர்ந்து விடுமாம்

இந்தியாவின் மிகப்பெரிய குப்பை மலை எங்கு இருக்கிறது? ஒருவேளை அடுத்த முறை 4ம் வகுப்புப் பாடத்தில் இந்த கேள்வி இடம்பெறலாம். யார் கண்டது?
தில்லியின் மிக உயர்ந்த குப்பை மலை: 2020ல் தாஜ் மஹாலை விட உயர்ந்து விடுமாம்


புது தில்லி: இந்தியாவின் மிகப்பெரிய குப்பை மலை எங்கு இருக்கிறது? ஒருவேளை அடுத்த முறை 4ம் வகுப்புப் பாடத்தில் இந்த கேள்வி இடம்பெறலாம். யார் கண்டது?

ஆம், புது தில்லியில் இருக்கும் குப்பை மலை வேகமாக வளர்ந்து வருகிறதாம். 2020ம் ஆண்டில் தாஜ்மஹாலை விட இது உயரமாக இருக்குமாம். அதனால்தானோ என்னவோ உலகிலேயே மிக மாசடைந்த தலைநகராக தில்லியை கருதுகிறது ஐக்கிய நாடுகள் சபை.

இந்த குப்பை மலையைச் சுற்றி ஏராளமான காக்கைக், குருவிகளும், தெரு நாய்கள், எலிகளும் சுற்றிக் கொண்டிருக்கும்.

இந்த குப்பைமேடு, ஆண்டு தோறும் வளர்ந்து கொண்டே போகிறது. இதன் துர்நாற்றத்தால் அருகில் இருக்கும் பகுதிகளிலும் ஆள்நடமாட்டம் இல்லாததால், குப்பை மலை வளர்வதில் எந்த தடையும் ஏற்படுவதில்லை.

தற்போது இந்த குப்பை மலையின் உயரம் எவ்வளவு தெரியுமா? 65 மீட்டர்களாம். அதாவது 213 அடி உயரம் கொண்டதாக உள்ளது.

இது 2020ம் ஆண்டில் 73 மீட்டர் உயரம் கொண்ட தாஜ்மஹாலை விட அதிக உயரம் கொண்டதாக மாறிவிடும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான டிரக்குகளில் கொண்டு வரப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்படுகிறது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com