கொல்கத்தாவில் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை: தொடரும் அரசியல் கொலைகள்   

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நில்வுகிறது
கொல்கத்தாவில் திரிணமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை: தொடரும் அரசியல் கொலைகள்   

கொல்கத்தா கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நில்வுகிறது

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின் போது பா.ஜனதா, இடதுசாரியினர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே கடும் மோதல் காணப்பட்டது. குறிப்பாக அமித் ஷா பங்கேற்ற பேரணியின் போது பாஜக மற்றும் திரிணாமுல் தொண்டர்களிடையே அடிதடி ஏற்பட்டது.

தேர்தல் முடிவுகளில் மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. அரசியல் வன்முறைக்கு பெயர் போன மேற்கு வங்காளத்தில் தேர்தலுக்கு பின்னரும் அரசியல் வன்முறை தொடர்கிறது.

இந்நிலையில் கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதால் அங்கு பதற்றம் நில்வுகிறது

வடக்கு கொல்கத்தாவின் நிம்தா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் குண்டு என்பவர் கடையொன்றில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் அவரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் இரு குண்டுகள் நிர்மல் குண்டுவின் உடலில் பாய்ந்துள்ளது.

உடனடியாக  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலே உயிரிழந்தார். அங்கிருந்து எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை தற்போது போலீசார் ஆய்வு செய்து வருகின்றாரகள்.

இதனிடையே நிர்மல் குண்டுவை பாஜகவின் கொலை செய்ததுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com