Enable Javscript for better performance
சே குவாரா, ஃபிடல் காஸ்ட்ரோவை பேட்டி கண்ட தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் மறைவு- Dinamani

சுடச்சுட

    

    சே குவாரா, ஃபிடல் காஸ்ட்ரோவை பேட்டி கண்ட தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் கோபிநாத் மறைவு

    By DIN  |   Published on : 09th June 2019 07:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    E_Gopinath

     

    சே குவாரா, ஃபிடல் காஸ்ட்ரோவை பேட்டி கண்ட தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர் இ.கோபிநாத் (88) சனிக்கிழமை மறைந்தார்.

    ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் தமிழக ஆசிரியராக கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த இ.கோபிநாத், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு பத்திரிகையாளராக தனது பணியை தொடங்கியவர்.

    சுதந்திரத்துக்குப் பின்னர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்காக நாட்டின் முதலாவது தேர்தல் செய்திகளை தொகுத்து வழங்கியவர். சமீபத்தில் நடந்து முடிந்த 17-ஆவது மக்களவைத் தேர்தல் வரை பணிகளைத் தொடர்ந்தவர்.

    அதுமட்டுமல்லாமல் சே குவாரா மற்றும் ஃபிடல் காஸ்ட்ரோ ஆகியோரை பேட்டி கண்ட நாட்டின் முதல் பத்திரிகையாளர் என்ற பெருமையைப் பெற்றவர்.

    அவருடைய மறைவுக்கு பத்திரிகையாளர்கள் தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai