காங்கோ நாட்டின் பாதுகாப்பு பணியில் இந்திய மகளிர் படை வீராங்கனைகள்!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் உள்நாட்டு பாதுகாப்புப் பணியில் ஐ.நா. சார்பாக இந்திய எல்லை ஆயுத காவல் படையைச் சேர்ந்த 22 பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் உள்நாட்டு பாதுகாப்புப் பணியில் ஐ.நா. சார்பாக இந்திய எல்லை ஆயுத காவல் படையைச் சேர்ந்த 22 பெண்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 உள்நாட்டு போர் நடைபெற்று வரும் காங்கோ, ஐ.நா. கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அங்கு ஐ.நா. சார்பாக பல நாடுகளின் வீரர்கள், பாதுகாப்பு பணி மற்றும் மற்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பணிக்கு இந்தியாவில் இருந்து முதல்முறையாக பெண்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.
 இதுதொடர்பாக எல்லை ஆயுத காவல் படை(சஷஸ்திர சீமா பல்) செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை கூறியதாவது:
 ஐ.நா.வின் பாதுகாப்பு பணி மற்றும் மற்ற பணிகளின் குழுவில் சிஆர்பிஎஃப் பிரிவு பெண்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் லைபீரியா நாட்டில் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
 அதைத் தொடர்ந்து எல்லை ஆயுத காவல் படையில் இருந்து 22 பெண்கள் காங்கோவுக்கு செல்கின்றனர். அங்கு பாதுகாப்புப் பணியிலும், மக்களுடன் பழகி அவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் பணியிலும் அவர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ரோந்து பணியிலும் அவர்கள் ஈடுபடுவர்.
 இந்த பணிக்கு சர்வதேச சட்டங்கள், ஆயுதங்களை கையாளுதல் ஆகியவை குறித்து நன்கு அறிந்திருக்க வேண்டும்.
 அதனால் இந்த பணிக்காக அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
 எல்லை ஆயுத காவல் படையில் சுமார் 80, 000 வீரர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் நக்ஸல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் ஏற்படும் கிளர்ச்சியை கட்டுப்படுத்தும் பணியிலும் ஈடுபடுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com