சுடச்சுட

  

  கேரளாவில் நிபா வைரஸ் பாதித்த இளைஞர் எப்படி இருக்கிறார்? 

  By DIN  |   Published on : 12th June 2019 04:14 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Nipah virus ernakulam


  கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தான் கேரளாவில் முதல் முதலில் நிபா வைரஸ் பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு, கலமச்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 23 வயது கல்லூரி மாணவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. 

  தொடர் சிகிச்சையின் காரணமாக, கடந்த 48 மணி நேரமாக, இளைஞருக்கு காய்ச்சல் ஏற்படவில்லை. எந்த உதவியும் இல்லாமல் அவர் தொடர்ந்து நடந்து செல்கிறார். வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார், இரவில் இயல்பான உறக்கம் இருக்கிறது என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

  அதே சமயம், நிபா வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai