சுடச்சுட

  

  உத்தரப்பிரதேசத்தின் பார் கவுன்சிலுக்குத் தேர்வான முதல் பெண் தலைவர் சுட்டுக் கொலை

  By DIN  |   Published on : 12th June 2019 06:06 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gun_shot


  ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தின் பார் கவுன்சிலுக்கு தேர்வான முதல் பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்ற தர்வேஷ் யாதவ் ஆக்ரா நீதிமன்றத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். 

  ஆக்ரா நீதிமன்றத்தில் தனது நண்பரும், சக வழக்குரைஞருமான மணீஷ் ஷர்மா, தர்வேஷ் யாதவை துப்பாக்கியால் சுட்டார். 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் தர்வேஷ் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்தார்.

  அடுத்த நொடியே, மணீஷ் ஷர்மா அதே துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே தர்வேஷ் உயிரிழந்துவிட்டார். மணீஷ் ஷர்மா கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  பிரயாக்ராஜில் ஜூன் 9ம் தேதி நடைபெற்ற பார் கவுன்சில் தேர்தலில் தர்வேஷ் யாதவ் முதல் பெண் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் மணீஷ் ஷர்மா என்பது குறிப்பிடத்தக்கது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai