இந்திய வம்சாவழியினருக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது!

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 3 பெண்கள் உள்பட 7 இந்திய வம்சாவழியினருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலியாவில் வசிக்கும் 3 பெண்கள் உள்பட 7 இந்திய வம்சாவழியினருக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் அரசி எலிசபெத்தின் பிறந்த தினக் கொண்டாட்டத்தையொட்டி, ஆஸ்திரேலியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 1000 பேரை கெளரவிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், இந்திய வம்சாவழியைச் சேர்ந்த 7 பேருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. மருத்துவத் துறையில் சிறந்து பணியாற்றிய ஜெயஸ்ரீ குல்கர்னி, இந்திய இசை மற்றும் நாட்டியக் கலையில் சிறந்த சேவையாற்றிய ஜெயஸ்ரீ ராமச்சந்திரன், கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறந்து விளங்கி வரும் வினிதா ஹார்திகர் ஆகிய 3 பெண்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இவை தவிர பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மகா சின்னதம்பி, சசி காந்த் கோச்சார், அருண் குமார், கிருஷ்ண தன நாதிம்பள்ளி ஆகிய இந்திய வம்சாவழியினரும் ஆஸ்திரேலியாவின் உயரிய விருதைப் பெற்றனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சி தொடர்பாக, கவர்னர் ஜெனரல் பீட்டர் கோஸ்குரோவ் கூறுகையில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருபவர்கள் ஆண்டுதோறும் கெளரவிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 80,000க்கும் அதிகமானோருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com