தில்லியில் இன்று மத்திய அமைச்சர்கள் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபின் முதலாவது அமைச்சர்கள் கூட்டம் புதன்கிழமை தில்லியில் நடைபெறுகிறது.  
தில்லியில் இன்று மத்திய அமைச்சர்கள் கூட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்றபின் முதலாவது அமைச்சர்கள் கூட்டம் புதன்கிழமை தில்லியில் நடைபெறுகிறது.  
இந்தக் கூட்டத்தில், அரசின் அடுத்த 5 ஆண்டுகால செயல்திட்டம் குறித்த பொருளில் விவாதிக்கப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
அடுத்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளக்கூடிய செயல் திட்டம் குறித்து  அமைச்சர்கள் மட்டத்தில் கவனமான ஆய்வு நடத்தி, செயல் வடிவம் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.  
பிரதமர் மோடியின் முதல் அரசிலும், இதேபோல அமைச்சரவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதேபோன்று, அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும் மக்களிடம் சேர்ப்பது குறித்தும், அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. 
மேலும், முக்கியத் துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அப்பிரிவுகளின் செயல்பாடுகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்கிறார். அடுத்த வாரம் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், கூட்டத்தில் பங்கேற்கும் இணை அமைச்சர்களின் முக்கியப் பங்கு குறித்தும்,  அவர்களுக்கு அளிக்கப்படும் பொறுப்புகள் குறித்தும் ஆலோசனைகள் அளிக்கப்படும். நாடாளுமன்றத்தில் எழுப்பப்படும் கேள்விகளை எதிர்கொள்ளும் விதம்,  நாடாளுமன்ற நடவடிக்கைகளை சுமுகமாக கையாளும் விதம் போன்றவை குறித்தும் இக்கூட்டத்தில் விரிவான ஆலோசனைகள் வழங்கப்படும். 
மக்களவைத் தேர்தல் வெற்றிக்குப்பின், பதவியேற்ற பிறகு நடைபெற்ற முதலாவது கேபினட் அமைச்சரவைக் கூட்டத்தின்போது பிரதமர் மோடி, அனைத்து விவசாயிகளுக்கும், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வீதம் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தும் பிரதமர் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தும் முக்கிய முடிவை எடுத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com