சுடச்சுட

  

  கோவா:  பாஜகவில் இணைய 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விருப்பம்

  By DIN  |   Published on : 13th June 2019 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vinai-tendulkar


  கோவா மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர், பாஜகவில் இணைய விரும்புவதாக அந்த மாநில பாஜக தலைவர் வினய் டெண்டுல்கர் புதன்கிழமை தெரிவித்தார்.
  முன்னதாக, காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள், பாஜகவில் இணைவதற்கு கோடிக்கணக்கான ரூபாய் அளிப்பதாக தெரிவித்து அக்கட்சியினர் குதிரைப் பேரத்தில் ஈடுபடுகின்றனர் என்று கோவா காங்கிரஸ் தலைவர் கிரீஷ் சோடான்கர் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், வினய் டெண்டுல்கர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பனாஜியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
  காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு எங்கள் கட்சி சார்பாக எந்த பணமும் அளிக்கப்படவில்லை.  கடந்த ஆண்டு அக்டோபரில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் சுபாஷ் சிரோத்கர் மற்றும் தயானந்த் சோப்டே ஆகிய இருவரும் எங்கள் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு நாங்கள் பணம் எதுவும் அளிக்கவில்லை. 
  எங்கள் கட்சியின் கொள்கைகள் மற்றும் பணியால் ஈர்க்கப்பட்டு பலர் பாஜகவில் இணைய விரும்புகின்றனர். கடந்த இரண்டு வாரங்களில், பாஜகவில் இணைவதற்கு 10 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விருப்பம் தெரிவித்தனர். இது அவர்களின் முடிவு. ஆனால் நாங்கள் அவர்களை எங்கள் கட்சியில் இணைக்க மறுத்துவிட்டோம். எந்தக் கட்சியிலும் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் எண்ணவில்லை. சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் எங்களிடம் உள்ளது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்த ஆட்சியை நிறைவுசெய்ய விரும்புகிறோம் என்று கூறினார்.
  காங்கிரஸ் மறுப்பு..: எனினும், பாஜக தலைவர் வினய் டெண்டுல்கரின் இந்த கருத்தை மாநில காங்கிரஸ் தலைவர் கிரீஷ் சோடான்கர் மறுத்துள்ளார். 
  கோவா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜகவுக்கு 17 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதையடுத்து காங்கிரஸýக்கு 15 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததால், கோவா பார்வர்டு கட்சியின் 3 எம்எல்ஏக்கள், 3 சுயேச்சைகள் ஆகியோருடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி செய்து வருகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai