Enable Javscript for better performance
நீரவ் மோடியின் ஜாமீன் மனு: பிரிட்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    நீரவ் மோடியின் ஜாமீன் மனு: பிரிட்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி

    By DIN  |   Published on : 13th June 2019 01:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    nirav_modi_new


    பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்த விவகாரத்தில் இந்தியாவுக்கு நாடு கடத்துதல் தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் தொழிலதிபர் நீரவ் மோடி ஜாமீன்கோரி தாக்கல் செய்த மனுவை பிரிட்டன் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
    இதுதொடர்பாக பிரிட்டன் உயர்நீதிமன்றத்தில் (ராயல் கோர்ட் ஆஃப் ஜஸ்டிஸ்) நீரவ் மோடி தாக்கல் செய்த மனு, நீதிபதி இன்கிரிட் சிம்லர் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
    அப்போது நீதிபதி கூறுகையில், நீரவ் மோடிக்கு ஜாமீன் அளித்தால் மீண்டும் அவர் சரணடையாமல் போக வாய்ப்புள்ளது. அதேபோல், சாட்சிகளை கலைக்கவும், நீதிக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் முயற்சி நடைபெறலாம். ஆதலால் நீரவ் மோடியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றார்.
    முன்னதாக, நீரவ் மோடிக்கு லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் ஜாமீன் அளிக்க மூன்று முறை மறுப்பு தெரிவித்தது. அப்போது நீரவ் மோடிக்கு ஜாமீன் அளித்தால், மீண்டும் சரணடையாமல் போகலாம் என்று லண்டன் நீதிமன்றம் தெரிவித்தது. 
    இந்தியாவிலுள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்த நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹூல் சோக்ஸி ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர். இவர்களில் நீரவ் மோடி, லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    இதையடுத்து நீரவ் மோடியை கைது செய்து ஒப்படைக்கும்படி ஸ்காட்லாந்து யார்டு போலீஸாருக்கு இந்திய அரசு கோரிக்கை விடுத்தது, இதையேற்று, லண்டனில் நீரவ் மோடியை கடந்த மார்ச் மாதம் 19ஆம் தேதி ஸ்காட்லாந்து யார்டு போலீஸார் கைது செய்தனர். அன்று முதல் லண்டனிலுள்ள சிறையில் நீரவ் மோடி அடைக்கப்பட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai