Enable Javscript for better performance
பாஜக மக்களவை குழுத் தலைவர் மோடி, துணைத் தலைவர் ராஜ்நாத் சிங்- Dinamani

சுடச்சுட

    

    பாஜக மக்களவை குழுத் தலைவர் மோடி, துணைத் தலைவர் ராஜ்நாத் சிங்

    By DIN  |   Published on : 13th June 2019 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modia1


    பாஜக மக்களவைக் குழுத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியும், துணைத் தலைவராக ராஜ்நாத் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மாநிலங்களவை குழு தலைவராக அமைச்சர் தாவர்சந்த் கெலாட், துணைத் தலைவராக அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் அமைச்சர் ஸ்மிருதி இரானி புதிதாக இடம் பெற்றுள்ளார்.
    கட்சியின் தலைமைக் கொறடாவாக சஞ்சய் ஜெய்ஸ்வால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர 3 பெண் எம்.பி.க்கள் துணை கொறடாக்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர மக்களவைக் கொறடாவாக 15 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர். மாநிலங்களவைக்கு 6 கொறடாக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
    பாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் மக்களவையில் இருந்து நிதின் கட்கரி, ரவி சங்கர் பிரசாத், அர்ஜுன் முண்டா, நரேந்திர சிங் தோமர், ஜுவல் ஓரம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். மாநிலங்களவையில் இருந்து ஜே.பி. நட்டா, ஓம் பிரகாஷ் மாத்தூர், நிர்மலா சீதாராமன், தர்மேந்திர சிங் பிரதான், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர். மக்களவையில் பாஜகவுக்கு இப்போது 303 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 70 எம்.பி.க்களும் உள்ளனர். மாநிலங்களவையில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
    பாஜகவின் நாடாளுமன்ற அலுவலக பொறுப்பாளராக கட்சியின் பொதுச் செயலாளர் விஜய் வர்கியா நியமிக்கப்பட்டுள்ளார். செயலாளராக பாலசுப்பிரமணியம் அறிவிக்கப்பட்டுள்ளார்.
    பாஜகவின் நாடாளுமன்ற நிர்வாகக் குழுவில் இந்த முறை மிகப்பெரிய தலைமுறை மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதுநாள் வரை இக்குழுவில் இடம் பெற்றிருந்த கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் குழுவில் இடம் பெறவில்லை. அதேபோல கடந்த முறை அமைச்சர்களாக இருந்த அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் இடம் பெறவில்லை. இருவரும் உடல்நிலை காரணமாக முக்கியப் பொறுப்புகள் வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
    பாஜக நாடாளுமன்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம் வரும் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினமே பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டமும் நடைபெறவுள்ளது. 17-ஆம் தேதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai