சுடச்சுட

  

  6 மாதங்களில் 9 விமானங்களை இழந்துவிட்ட இந்திய விமானப்படை

  By DIN  |   Published on : 13th June 2019 05:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  air


  நிகழாண்டில் கடந்த 6 மாதங்களில் மட்டும் போர் விமானங்கள் உள்ளிட்ட 9 விமானங்களையும், ஒரு ஹெலிகாப்டரையும் இந்திய விமானப்படை இழந்து விட்டது.
  இதுகுறித்து இந்திய விமானப்படை அதிகாரிகள் கூறியதாவது:
  உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் இந்திய விமானப்படையின் ஜாக்குவார் ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி, பெங்களூருவில் விமானப்படையின் ஹாக் ரக 2 விமானங்கள் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே மாதத்தில் பெங்களூருவிலும், ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானிலும் மேலும் 2 விமானங்கள் விபத்தில் சிக்கின. இதில் பெங்களூரில் மிராஜ் 2000 ரக விமானம் விபத்தில் சிக்கியது. இதில் விமானி ஒருவர் பலியானார். பொக்ரானில் மிக்-27 ரக விமானம் விபத்துக்குள்ளானது.
  அதேபோல், ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்களை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானின் பாலாகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானங்கள் குண்டுவீசின. இதற்குப் பதிலடியாக இந்திய எல்லையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் விமானங்கள் பிப்ரவரி 27ஆம் தேதி வந்தன. அதை இந்திய விமானங்கள் விரட்டியடித்தன. அப்போது நடுவானில் இருநாட்டு விமானப்படை விமானங்களுக்கு இடையே நடைபெற்ற சண்டையில், விமானி அபிநந்தன் வர்த்தமான் இயக்கிய மிக்-21 பைசன் ரக விமானம் பாகிஸ்தான் விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதே தினத்தில் பட்காம் மாவட்டத்தில் மிக்-17 ரக ஹெலிகாப்டர், தவறாக நடத்தப்பட்ட தாக்குதலில் சிக்கியது. 
  மார்ச் மாதத்தில் இந்திய விமானப்படையின் மிக்-27 ரக விமானம், மிக்-21 ரக விமானம் ஆகிய 2 விமானங்கள் விபத்தில் சிக்கின. அதில் மிக்-27 விமானம், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகேயும், மிக்-21 ரக விமானம் பிகானீர் அருகேயும் விபத்துக்குள்ளாகின.
  இதையடுத்து அண்மையில் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து அருணாசலப் பிரதேசம் சென்ற ஏஎன்-32 ரக போக்குவரத்து விமானம் வனப்பகுதி மேலே பறந்தபோது காணாமல் போனது. அதில் 13 பேர் பயணித்தனர். அந்த விமானத்தின் பாகம், நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai