மாநிலங்களவையில் காங்கிரஸ் முத்தலாக் மசோதாவை எதிர்க்கும்: அபிஷேக் மனு சிங்வி

முத்தலாக் மசோதாவின் சில ஷரத்துகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதால் மாநிலங்களவையில் காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார
மாநிலங்களவையில் காங்கிரஸ் முத்தலாக் மசோதாவை எதிர்க்கும்: அபிஷேக் மனு சிங்வி


முத்தலாக் மசோதாவின் சில ஷரத்துகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டும் என்பதால் மாநிலங்களவையில் காங்கிரஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் அபிஷேக் சிங்வி தெரிவித்துள்ளார். 

முத்தலாக் மசோதா நாடாளுமன்றத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய அரசு நேற்று (புதன்கிழமை) தெரிவித்திருந்தது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை நேற்று அளித்தது. 

இந்த நிலையில், காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினரும், செய்தித் தொடர்பாளருமான அபிஷேக் மனு சிங்வி, 

"முத்தலாக் விவகாரத்தில் நாங்கள் சில அடிப்படையான கருத்துகளை எழுப்பினோம். அதற்கு அரசு ஒப்புக்கொண்டது. எங்களுடைய கருத்துக்கு முன்கூட்டியே ஒப்புக்கொண்டிருந்தால், நிறைய நேரம் வீணாகியிருக்காது. இன்னும், ஒன்றிரண்டு கருத்துகள் உள்ளது. அதன்மீதும் விவாதங்கள் தேவை, அதனால் இந்த மசோதாவை நாங்கள் எதிர்ப்போம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com