மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: மேற்கு வங்க ஆளுநர்

நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் டிரிபாதி கேட்டுக்கொண்டார். 
மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்: மேற்கு வங்க ஆளுநர்


நோயாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு மேற்கு வங்க ஆளுநர் கேசரி நாத் டிரிபாதி கேட்டுக்கொண்டார். 

மேற்கு வங்க மாநிலம் என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் கடந்த திங்கள்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, உயிரிழந்தவரின் உறவினர்கள் 2 மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், அம்மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக, அவசர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வார்டுகளில் கடந்த மூன்று நாட்களாக மருத்துவச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மேற்கு வங்க மாநில ஆளுநர் கேசரி நாத் டிரிபாதி மருத்துவர்கள் பணிக்கு திரும்பக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"நோயாளிகளின் நலன் கருதி மருத்துவர்கள் தங்களது பணிக்கு திரும்ப வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார். உரிய பாதுகாப்பு, மருத்துவமனையில் மருத்துவர்கள் பாதுகாப்பு, தகுந்த விசாரனை, மருத்துவர்களை தாக்கிய அனைவருக்கும் தண்டனை மற்றும் அவர்களது குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை அவர்கள் வைத்துள்ளனர். மேற்கு வங்க அரசால் பாதுகாப்புக்கு உறுதியளித்த பிறகு, நாங்கள் எங்களது பணியை தொடருவோம் என்று தெரிவித்துள்ளனர். 

மருத்துவர்களின் கோரிக்கை, உரிய நடவடிக்கைக்காக மாநில அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com