பாஜக பேச்சை கேட்டு 4 கட்சிகள் கூட்டத்துக்கு ஆளுநர் அழைப்பு: மம்தா

பாஜக கேட்டுக்கொண்டதன் பெயரிலேயே, ஆளுநர் கேசரி நாத் 4 முக்கியக் கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். 
பாஜக பேச்சை கேட்டு 4 கட்சிகள் கூட்டத்துக்கு ஆளுநர் அழைப்பு: மம்தா


பாஜக கேட்டுக்கொண்டதன் பெயரிலேயே, ஆளுநர் கேசரி நாத் 4 முக்கியக் கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். 

தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ், பாஜக நிர்வாகிகள் இடையே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற வன்முறையில், 3 பேர் கொல்லப்பட்டனர். 

இதையடுத்து, மேற்கு வங்க மாநிலத்தின் பிரதான கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளுக்கு அம்மாநில ஆளுநர் கேசரி நாத் அழைப்பு விடுத்துள்ளார். மாநிலத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,

"பாஜகவின் ஊதுகுழல் தான் ஆளுநர். அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துமாறு பாஜக அவரை கேட்டுக்கொண்டது. அதனால் தான் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு எனக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், நான் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்துவிட்டேன். நீங்கள் ஆளுநர், நான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. அனைத்திற்கும் மேல் சட்டம், ஒழுங்கு மாநிலப் பிரச்னையாகும். உங்கள் (ஆளுநர்) பிரச்னை இல்லை. தேநீர் விருந்துக்கோ அல்லது அமைதிப் பேச்சுவார்த்தைக்கோ ஆளுநர் அழைப்பு விடுக்கலாம். 

இதனால், இந்த கூட்டத்துக்கு கட்சியின் பிரதிநிதியாக ஒருவரை நான் அனுப்புகிறேன். அவர் அங்கு போவார், தேநீர் அருந்துவார், திரும்பி வருவார்" என்றார். 

இதன்மூலம், ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெறும் இந்த கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பார்த்தா சாட்டர்ஜி, பாஜக மாநிலத் தலைவர் திலிப் கோஷ், காங்கிரஸ் மாநிலத் தலைவர் சோமென் மித்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் சூர்ய கன்தா மிஸ்ரா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com