அதிவேக ஆளில்லா விமானம் வெற்றிகரமாக சோதனை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ஆளில்லா விமானம், ஒடிஸாவின் அப்துல்கலாம் தீவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் புதன்கிழமை முதல் முறையாக பரிசோதிக்கப்பட்டது.


உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிவேக ஆளில்லா விமானம், ஒடிஸாவின் அப்துல்கலாம் தீவில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் புதன்கிழமை முதல் முறையாக பரிசோதிக்கப்பட்டது. இச்சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஓ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது: 
ஒலியை விட வேகமாக செல்லக் கூடிய (சூப்பர்சானிக்) இந்த ஆளில்லா விமானத்தின் தொழில்நுட்பம், அதிவேகத்துடன் நீண்ட தூரம் பாயக் கூடிய ஏவுகணைகள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றும். இதன் மூலம் எதிர்காலத்தில் செயற்கைகோள்களையும் செலுத்த முடியும். 
ஒடிஸா மாநிலத்தில் வங்கக் கடல் பகுதியில் அமைந்துள்ள அப்துல்கலாம் தீவில் புதன்கிழமை காலையில் அதிவேக ஆளில்லா விமானத்தின் முதல் பரிசோதனை நடைபெற்றது. ரேடார்களிலிருந்து கிடைத்த தகவல்களின் மூலம் இப்பரிசோதனையின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. தற்போது சோதிக்கப்பட்ட அதிவேக ஆளில்லா விமானம், பரிசோதனை நோக்கத்துக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகும். இந்த விமானம், 20 நொடிகளில் 32.5 கிமீ உயரத்துக்கு பறக்கும் திறன் உடையது. அதிநவீன ஸ்ராம்ஜெட் இன்ஜின் மூலம் இயங்கக் கூடியது. இந்த விமானத்தின் முழுமையான திறனும் உறுதி செய்யப்படும்போது, இவ்வகை தொழில்நுட்பத்தை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும் என்று டிஆர்டிஓ அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com