கடந்த 11 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி வங்கி நிதி மோசடி: ஆர்பிஐ தகவல்

கடந்த 11 ஆண்டுகளில் ரூ.2.05 லட்சம் கோடி அளவில் வங்கிகளில் கடன் உள்ளிட்ட நிதி மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. 2008-09 நிதியாண்டு 
கடந்த 11 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி வங்கி நிதி மோசடி: ஆர்பிஐ தகவல்


கடந்த 11 ஆண்டுகளில் ரூ.2.05 லட்சம் கோடி அளவில் வங்கிகளில் கடன் உள்ளிட்ட நிதி மோசடிகள் நிகழ்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. 2008-09 நிதியாண்டு 
முதல் 2018-19 நிதியாண்டு வரை மொத்தம் 53,334 வங்கி நிதி மோசடி நிகழ்ந்துள்ளன. இதில் ஐசிஐசிஐ, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி ஆகிய வங்கிகளில் அதிக எண்ணிக்கையில் மோசடிகள் நடந்துள்ளன.
வங்கி நிதி மோசடிகள் தொடர்பாக தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஆர்பிஐ விரிவாக பதிலளித்துள்ளது. 
அதில் இந்த மோசடி குறித்த விவரங்கள் தெரியவந்துள்ளன. ஐசிஐசிஐ வங்கியில் அதிகபட்சமாக 6,811 மோசடிகள் நடந்துள்ளன. இதில் ரூ.5,033.81 கோடி மோசடி நிகழ்ந்துள்ளது. எஸ்பிஐ-யில் ரூ.23,734.74 கோடி நிதி மோசடி நடந்துள்ளது. அந்த வங்கியில் மொத்தம் 6,793 நிதி மோசடிகள் நிகழ்ந்துள்ளன. மூன்றாவதாக  ஹெச்டிஎஃப்சி வங்கியில் ரூ.1200.79 கோடி அளவுக்கு 2,497 மோசடிகள் நிகழ்ந்துள்ளன. இதில் ரூ.1,200.79 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.
பாங்க் ஆப் பரோடாவில் 2,160 மோசடிகளும் (ரூ.12,962.96 கோடி), பஞ்சாப் நேஷனல் வங்கியில் 2,047 மோசடிகளும்  (ரூ.28,400.74 கோடி), ஆக்சிஸ் வங்கியில் 1,944 (ரூ.5,301.69 கோடி) மோசடிகளும் நிகழ்ந்துள்ளன. 
பாங்க் ஆப் இந்தியா, சிண்டிகேட் வங்கி, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, ஐடிபிஐ வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, கோட்டக் மகேந்திரா ஆகிய வங்கிகளிலும் அதிக அளவில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது.
இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், பஞ்சாப் சிந்த் வங்கி, விஜயா வங்கி, யெஸ் பாங்க் ஆகியவையும் மோசடிகளில் இருந்து தப்பவில்லை. 
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் 261 மோசடிகளும் (ரூ.493.92 கோடி), லட்சுமி விலாஸ் வங்கியில் 259 மோசடிகளும் (ரூ.862.64 கோடி)  நிகழ்ந்துள்ளன. மற்ற வங்கிகளுடன் ஒப்பிடும் போது இந்த இரு வங்கிகளும் சற்று குறைவான மோசடிகளையே சந்தித்துள்ளன.
வெளிநாட்டு வங்கிகளும் நிதி மோசடிகளில் இருந்து தப்பவில்லை. அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பாங்கிங் கார்ப்பரேஷனில் ரூ.86.21 கோடியும், சிட்டி வங்கியில் ரூ.578.09 கோடியும், ஹெச்எஸ்பிசி வங்கியில் ரூ.312.1 கோடியும், ராயல் பாங்க் ஆப் ஸ்காட்லாந்தில் ரூ.12.69 கோடியும்,  ஸ்டாண்டர்ட் சாட்டர்ட் வங்கியில் ரூ.1221.41 கோடியும் நிதி மோசடி நடந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com