தெலங்கானா: வானொலி தொகுப்பாளர்களாக மாறிய சிறைக் கைதிகள்!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் தனித்திறனைக் கண்டறியும் நோக்கிலும், அவர்களுக்குப் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தும்


சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளின் தனித்திறனைக் கண்டறியும் நோக்கிலும், அவர்களுக்குப் பொழுதுபோக்கு அம்சங்களை ஏற்படுத்தும் வகையிலும் தனி வானொலி நிலையம் ஒன்றை தெலங்கானா மாநில அரசு தொடங்கியுள்ளது. சிறையிலுள்ள கைதிகளே வானொலி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர்களாக மாறியுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், சிறையிலிருந்து வெளியேறிய பின்னர் சுயதொழில் செய்யும் தன்னம்பிக்கையை அதிகரிக்க, சிறைக்குள் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி, பேக்கரி தொழிலில் ஈடுபடுவது, ஊதுவத்தி தயாரிப்பது, நோட்டு புத்தகங்கள் தயாரிப்பது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும்.
ஆனால், தெலங்கானா மாநில அரசு இந்த விஷயத்தில் புதிய உத்தியைச் செயல்படுத்தி, மாநிலத்தில் உள்ள அனைத்து சிறை வளாகங்களிலும் அந்தர்வாணி என்ற வானொலியைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், சிறையிலுள்ள கைதிகள் வானொலி நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராக மாற பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, மாநில சிறைத் துறைத் தலைமை இயக்குநர் வி.கே.சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சிறையிலுள்ள கைதிகளுக்கு மறுவாழ்வு அளிப்பதே எங்கள் நோக்கமாகும். சிறையிலிருந்து வெளியேறிய பின்னர், அவர்கள் அனைவரும் சமூகத்தில் நற்பேறு பெற்றுத் திகழ வேண்டும். அதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com