சுடச்சுட

  

  இந்தியச் சந்தையால் புதுவிதமான தயாரிப்புகள்: சுந்தர் பிச்சை

  By DIN  |   Published on : 14th June 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sundar


  இந்தியாவின் மிகப் பெரிய சந்தை காரணமாக, புதுவிதமான தயாரிப்புகளை கூகுள் வெளியிட்டு வருவதாக அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
  வாஷிங்டனில் அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சுந்தர் பிச்சை பேசியதாவது:
  தொழில்நுட்ப ரீதியாக இந்தியா பெரும் வளர்ச்சியை எட்டிவருகிறது. தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, நிர்வாகத்தைச் சரிசெய்வதோடு, சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளையும் சரிசெய்ய முடியும். அந்த நடைமுறைகளில் பங்கேற்க கூகுள் நிறுவனம் பெருமையடைகிறது. 
  கடந்த 2004-ஆம் ஆண்டில், இந்தியாவில் செல்லிடப்பேசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 2 மட்டுமே இருந்தன. ஆனால், தற்போது 200க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசி நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன. குறைந்த விலையில் செல்லிடப்பேசிகளை உற்பத்தி செய்ய நாங்கள் உறுதியாக உள்ளோம். 
  இந்தியாவின் மிகப் பெரிய சந்தை, புதுவிதமான தயாரிப்புகளை உருவாக்குவதற்கு வழிகோலி வருகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்புகளை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்துவருகிறோம். எனவே, இந்தியாவை ஒரு வாய்ப்பாக மட்டும் நாங்கள் கருதவில்லை. இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் முன்னேற்ற கூகுள் உறுதிகொண்டுள்ளது என்றார் அவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai