சுடச்சுட

  


  மக்களவைக்கான தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சி எம்.பி.க்கள் குழுவின் தலைவராக மூத்த எம்.பி. நாமா நாகேஸ்வர ராவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  ஹைதராபாதில் டிஆர்எஸ் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் மக்களவைக்கான டிஆர்எஸ் எம்.பி.க்கள் குழுவின் தலைவராக நாமா நாகேஸ்வர ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  மாநிலங்களவைக்கான அக்கட்சியின் எம்.பி.க்கள் குழுத் தலைவராக மூத்த தலைவர் கே. கேசவ ராவ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
  மக்களவைக்கான டிஆர்எஸ் கட்சியின் கொறடாவாக பி.பி. பாட்டீலும், மக்களவைக்கான அக்கட்சி எம்.பி.க்கள் குழுவின் துணைத் தலைவராக கே. பிரபாகர் ரெட்டியும் தேர்வு செய்யப்பட்டனர்.
  மாநிலங்களவைக்கான டிஆர்எஸ் கட்சியின் எம்.பி.க்கள் குழுவின் துணைத் தலைவராக பந்தா பிரகாஷ் முடிராஜும், அந்த அவையின் டிஆர்எஸ் கட்சியின் கொறடாவாக ஜே. சந்தோஷ் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.
  தலைவர்கள் தேர்வு தொடர்பான தகவல்களை நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்காத் ஜோஷிக்கு கடிதம் மூலம் டிஆர்எஸ் கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான கே. சந்திரசேகர் ராவ் தெரியப்படுத்தினார்.
  மக்களவையில் டிஆர்எஸ் கட்சிக்கு 9 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் அக்கட்சிக்கு 6 எம்.பி.க்களும் உள்ளனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai