சுடச்சுட

  

  மேற்குவங்க தாக்குதல்: விஸ்வரூபம் எடுக்கும் மருத்துவர்கள் போராட்டம்

  By DIN  |   Published on : 14th June 2019 12:47 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  D8_2XQEU8AEx0Ut

   

  மேற்குவங்கத்தில் மருத்துவவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டு வருகின்றனர்.

  கொல்கத்தாவில் இரு மருத்துவர்கள் மீது திங்கள்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தற்போது நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் மூலம் எதிரொலித்து வருகிறது. என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் இறப்பு காரணமாக மருத்துவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் சக மருத்துவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்நிலையில், கடந்த 4 நாட்களாக மேற்கு வங்கத்தில் மட்டும் நடந்து வந்த மருத்துவர்கள் போராட்டம் வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. மருத்துவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தாவின் என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவர்கள் பணியை ராஜிநாமா செய்துள்ளனர். மேலும் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி மேற்குவங்க ஆளுநரிடம் மருத்துவர்கள் முறையிட்டுள்ளனர்.

  இதையடுத்து சத்தீஸ்கர், மஹாராஷ்டிரம், தில்லி எய்ம்ஸ், திருவனந்தபுரம் உட்பட நாடு முழுவதும் மருத்துவர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவசரப் பிரிவு மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் வெளிநோயாளிகள் சிகிச்சை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பணியில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தங்கள் கைகளில் கறுப்புப் பட்டை அணிந்து பணி செய்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். 

  முன்னதாக, தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியிடம் மருத்துவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை வைத்தது. ஆனால், அடுத்த 4 மணிநேரங்களில் பணிக்கு திரும்பவில்லை என்றால் கடும் நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai