சுடச்சுட

  

  திருட்டைத் தடுக்க புதிய தடை உத்தரவு: ஏர் இந்தியா ஊழியர்கள் இனி அதைக் கொண்டு வர முடியாது

  By ENS  |   Published on : 14th June 2019 04:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  AIRINDIA


  புது தில்லி: ஏர் இந்திய விமானத்தில் ஏராளமான உணவு பொருட்கள் திருடுப் போவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விமானத்துக்குள் இருந்து உணவு பொருட்களை வெளியே எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

  ஏர் இந்தியா நிர்வாகத்தின் இந்த தடை உத்தரவால், விமானத்துக்குள் இருந்து, எந்தவொரு ஊழியரும், தனது சொந்த உணவுப் பொருள் மற்றும் உணவு டிரேவையும் கூட வெளியே கொண்டு வர முடியாது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  சமீபத்தில், விமானத்துக்குள் பயணிகளுக்கு வழங்கப்படாத உணவுகள் மற்றும் உலர்ந்த உணவுப் பொருட்களை 4 ஊழியர்கள் திருடி வந்ததை ஏர் இந்தியா நிர்வாகம் கண்டுபிடித்தது. இதுபோன்று பல முறை நடந்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

  விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் எந்த செயலையும் ஏற்கப்போவதில்லை என்று அறிவித்திருக்கும் ஏர் இந்தியா விமானம், விமானத்துக்குள் இருந்து குளிர்பானம், உணவுப் பொருட்கள் என எதையும் ஊழியர்கள் கொண்டு வர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் மதுபானம், விமானத்தில் வழங்கப்படும் மற்ற பொருட்களும் கூட இடம்பெற்றுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai