ஜிஎஸ்டி தொடர்பாக அகில இந்திய வணிகர் கூட்டமைப்பின் வெள்ளை அறிக்கை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) தயாரித்த வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்டார். அப்போது,
ஜிஎஸ்டி தொடர்பாக சிஏஐடி தயாரித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ஜிஎஸ்டி தொடர்பாக சிஏஐடி தயாரித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.


சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடர்பாக அகில இந்திய வணிகர்களின் கூட்டமைப்பு (சிஏஐடி) தயாரித்த வெள்ளை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தில்லியில் வியாழக்கிழமை வெளியிட்டார். அப்போது, சிஏஐடி பொதுச் செயலர் பிரவீண் கண்டெல்வால்  நிதியமைச்சரிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதன் விவரம் வருமாறு: 
மூலப் பொருள்களுக்கான வரி விகிதம், தயாரிக்கப்படும் பொருள்களின் வரியை விட குறைவாக இருக்க வேண்டும். குறிப்பாக ஆட்டோ உதிரி பாகங்கள், அலுமினிய பாத்திரங்கள் உள்ளிட்ட பொருள்களை 28 சதவீதம் ஜிஎஸ்டி பிரிவிலிருந்து நீக்கக் கூடாது. ஜிஎஸ்டிஆர் 9, 9சி படிவத்தை எளிமையாக்க வேண்டும். வங்கி சாராத நிதி நிறுவனங்கள், குறு நிதி நிறுவனங்கள் போன்றவை முத்ரா திட்டத்துடன் இணைக்க வேண்டும்.
 என்இஎஃப்டி, ஆர்டிஜிஎஸ் நிதிப் பரிமாற்றத்துக்கு ஒரு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. அதை தற்போது ரிசர்வ் வங்கி ரத்து செய்து அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு வரவேற்கும் வகையில் உள்ளது. இது 2.5 கோடி வணிகர்கள் ஆன்லைன் நிதிப் பரிமாற்றத்தில் ஈடுபட ஊக்கம் அளிப்பதாக அமையும். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஜிஎஸ்டி லோக்பால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. சிஏஐடியின் கோரிக்கைகளைப் பரிசீலிப்பதாக மத்திய நிதிமையச்சர் தெரிவித்தார்.
ஜிஎஸ்டி குறித்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிஜிஎஸ்டி, எஸ்ஜிஎஸ்டி ஆகியவற்றின் வரம்புகளை தெளிவுப்படுத்த வேண்டும். ஐடிசி -04 படிவத்தை ரத்து செய்ய வேண்டும் போன்றவையும் வலியுறுத்தப்பட்டுள்ளன. மேலும், செல்லிடப்பேசி உறைகள், உணவுப் பொருள்கள், உலர் பழங்கள், ஐஸ் கிரீம்கள், உணவு தானியங்கள், பெயிண்ட், மார்பிள், பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், வேளாண் பொருள்கள் போன்றவற்றுக்கு ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
ஜிஎஸ்டி வரவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஜிஎஸ்டி செலுத்துவதை விற்போரிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com