திசை மாறியது வாயு புயல்: குஜராத்துக்கு அதிக பாதிப்பில்லை

அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் திசை மாறிவிட்டதால், குஜராத் மாநிலம் பேராபத்தில் இருந்து தப்பியது. இருப்பினும், பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மாநில அரசு தீவிரமா
வாயு புயல் கரையைக் கடக்கும் என்ற எதிர்பார்ப்பில், குஜராத் மாநிலம், வெராவல் துறைமுகத்தில் பாதுகாப்பாக ஒரே இடத்தில் வியாழக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள்.
வாயு புயல் கரையைக் கடக்கும் என்ற எதிர்பார்ப்பில், குஜராத் மாநிலம், வெராவல் துறைமுகத்தில் பாதுகாப்பாக ஒரே இடத்தில் வியாழக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடிப் படகுகள்.


அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் திசை மாறிவிட்டதால், குஜராத் மாநிலம் பேராபத்தில் இருந்து தப்பியது. இருப்பினும், பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
அரபிக் கடலில் உருவான வாயு புயல் தீவிரமடைந்து, குஜராத் மாநிலத்தின் செளராஷ்டிரா கடற்கரையில் வியாழக்கிழமை மதியம் கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இதனிடையே, வாயு புயல் வியாழக்கிழமை திடீரென்று திசை மாறியது. இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
வாயு புயல், குஜராத்தின் வெராவல் நகருக்கு 110 கி.மீ. தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ளது. அந்தப் புயல், வடக்கு-வடமேற்கு திசையிலும், பின்னர் வடமேற்கு திசையிலும் நகர வாய்ப்புள்ளது. இந்தப் புயலின் தாக்கத்தால், செளராஷ்டிரா கடற்கரை, கிர் சோம்நாத், டையூ, ஜுனாகர், போர்பந்தர், தேவபூமி துவாரகை ஆகிய கடலோர மாவட்டங்களில் அடுத்த 12 மணி நேரத்துக்கு மணிக்கு 90 முதல் 110 கி.மீ. வரையிலான வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் திசை மாறிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தாலும், பலத்த காற்றுடன் மழை பெய்யும் ன்பதால் புயலை எதிர்கொள்வதற்கு முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் இருப்பதாக, மாநில கூடுதல் தலைமைச் செயலர் பங்கஜ் குமார் கூறினார்.
முன்னேற்பாடுகள் குறித்து போர்பந்தரில் உள்ள கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
புயல் நகரத் தொடங்கியிருப்பதால், அடுத்த 50-60 மணி நேரம் மிகவும் முக்கியமானதாகும். மீட்பு பணிகளுக்காக, தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 33 குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 9 குழுக்கள் கடலோர மாவட்டங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் சுமார் 100 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதுமட்டுமன்றி, ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை, மாநில ரிசர்வ் போலீஸ் படை ஆகியவற்றைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்  கட்ச் மற்றும் செளராஷ்டிரா பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலோரப் பகுதிகளில் உள்ள அனைத்து விமான நிலையங்களும், துறைமுகங்களும் மூடப்பட்டுள்ளன என்றார் அவர். இதேபோல், புயல் காரணமாக, 86 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com