மிஸோரத்தில் வரிகள் இல்லாத பட்ஜெட்: முதல்வர் ஜோரம்தங்கா தாக்கல்

மிஸோரத்தில் வரிகள் இல்லாத பட்ஜெட்டை முதல்வர் ஜோரம்தங்கா வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளார்.
மிஸோரத்தில் வரிகள் இல்லாத பட்ஜெட்: முதல்வர் ஜோரம்தங்கா தாக்கல்


மிஸோரத்தில் வரிகள் இல்லாத பட்ஜெட்டை முதல்வர் ஜோரம்தங்கா வியாழக்கிழமை தாக்கல் செய்துள்ளார்.
மிஸோரம் முதல்வர் ஜோரம்தங்கா, நிதி இலாகாவையும் தன்னிடமே வைத்துள்ளார். இந்நிலையில் மிஸோரம் சட்டப்பேரவையில் 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை ஜோரம்தங்கா வியாழக்கிழமை தாக்கல் செய்தார். மிஸோ மொழியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. ரூ.10,692.30 கோடியாக மொத்த பட்ஜெட் மதிப்பிடப்பட்டிருந்தது.
இதில் சமூக பொருளாதார மேம்பாட்டு கொள்கையை செயல்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், மாநிலத்தில் புதிதாக 3 மாவட்டங்களை உருவாக்கியிருப்பது தொடர்பான அறிவிப்பும் இடம்பெற்றிருந்தது. பட்ஜெட்டில் ரூ.750 கோடி நிதியை, சமூக பொருளாதார மேம்பாட்டு கொள்கையை செயல்படுத்தும் திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. பட்ஜெட் தாக்கலின்போது ஜோரம்தங்கா பேசியதாவது:
2008ஆம் ஆண்டு மிஸோ தேசிய தேசிய முன்னணி அரசால் எடுக்கப்பட்ட முடிவுகளை மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் அரசு செயல்படுத்தவில்லை. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 3 மாவட்டங்களின் ஆரம்பக்கட்ட செலவினங்களுக்கு ரூ.8.55 கோடி நிதியும், அந்த 3 மாவட்டங்களிலும்  காவல்துறை துணை ஆணையர்கள் அலுவலகங்கள் கட்டுவதற்கு ரூ.4.5 கோடி நிதியும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் அலுவலகங்கள் கட்டுவதற்கு ரூ.1.95 லட்சம் கோடி நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து, மாநிலத்தில் முந்தைய மிஸோ தேசிய முன்னணி அரசால் அறிவிக்கப்பட்ட சுகாதாரம் தொடர்பான திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதை கவனத்தில் கொண்டு, அதில் புதிய ஆசிரியர்களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மிஸோரத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை உருவாக்குவதற்கு ரூ.159.34 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
அதேபோல், அந்த அமைப்பின் செலவுகளுக்காக பட்ஜெட்டில் ரூ.371.06 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com