'வாயு' அல்ல சரியான வாலு புயல்: மீண்டும் குஜராத்தை குறிவைத்து யு டர்ன் அடித்தது!

அரபிக் கடலில் உருவாகி குஜராத்தைக் கடந்து சென்ற வாயு புயலானது, மீண்டும் யு டர்ன் அடித்து குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'வாயு' அல்ல சரியான வாலு புயல்: மீண்டும் குஜராத்தை குறிவைத்து யு டர்ன் அடித்தது!


அரபிக் கடலில் உருவாகி குஜராத்தைக் கடந்து சென்ற வாயு புயலானது, மீண்டும் யு டர்ன் அடித்து குஜராத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது நாளை மறுநாள் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாயு புயலானது கடந்த புதன்கிழமை இரவு அல்லது வியாழக்கிழமை காலை குஜராத்தில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. முன்னெச்சரிக்கையாக கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஆனால் கடைசி நேரத்தில் குஜராத்தின் கரைப் பகுதியைக் கடக்காமல் கடந்து சென்றது வாயு புயல். நூலிழையில் தப்பியதாக குஜராத் அரசும், மக்களும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஆனால், சென்ற வேகத்தில் யு டர்ன் அடித்து மீண்டும் குஜராத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இது ஜூன் 16ம் தேதி குஜராத்தை நெருங்கி வந்து, 17 - 18ம் தேதிக்கு இடையே கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது அதி தீவிரப் புயலாக இருக்கும் வாயு, குஜராத்தை நெருங்கும் போது புயல் சின்னமாக அல்லது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையாக வலுவிழந்துதான் கரையைக் கடக்கும் என்று புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

புதன்கிழமை பாதுகாப்பான இடங்களுக்குச் சென்ற மக்கள் நேற்று முதல் தங்களது பகுதிக்கு திரும்பியதும், இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் குஜராத்தை அச்சுறுத்தும் வாயு புயலால் முன்னேற்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com