தேவி நாச்சியப்பனுக்கு பால புரஸ்கார், சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார்

இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமி, இளம் படைப்பாளிகளுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருதுகளை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. 
தேவி நாச்சியப்பனுக்கு பால புரஸ்கார், சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார்

இலக்கிய அமைப்பான சாகித்ய அகாதெமி, இளம் படைப்பாளிகளுக்கான 2019-ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார், யுவ சாகித்ய புரஸ்கார் விருதுகளை வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. 
இதில் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் தேவி நாச்சியப்பன், சபரிநாதன் ஆகியோர் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருதுக்கு 22 பேரும், யுவ புரஸ்கார் விருதுக்கு 23 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
சாகித்ய அகாதெமியின் தலைவர் சந்திரசேகர் கம்பர் தலைமையின்கீழ் அகாதெமின் நிர்வாகக் குழு அகர்தலாவில் விருது பெறுவோர் தேர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. குழந்தைகள் தினத்தின்போது பால புரஸ்கார் விருது, தேர்வுபெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஆனால், யுவ புரஸ்கார் விருது வழங்குவதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 
இது குறித்து சாகித்ய அகாதெமி வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பால புரஸ்கார் விருதானது ஐந்து ஆண்டுகளின்போது வெளியிடப்பட்ட நூல்களுக்கு (ஜனவரி, 1,2013 மற்றும் டிசம்பர் 31, 2017) வழங்கப்படுகிறது. எனினும், தொடக்க 10 ஆண்டுகளின்போது (2010 முதல் 2019 வரை) குழந்தைகள் இலக்கியத்திற்கு ஒட்டுமொத்த பங்களிப்பு செய்ததன் பேரில் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்படலாம்' என அதில் தெரிவிக்கப்
பட்டுள்ளது. 
அதன்படி, 2019-ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தேவி நாச்சியப்பனுக்கு (தெய்வானை) வழங்கப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்த இவர் குழந்தைகள் இலக்கிய துறைக்கு ஆற்றிய ஒட்டுமொத்த பங்களிப்புக்காக இந்து விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை இவ்விருதுக்கு ஆர். மீனாட்சி, கே.எம். கோதண்டம், குழ. கதிரேசன் ஆகியோர் கொண்ட தேர்வுக் குழு பரிந்துரை செய்தது. 
 அதேபோன்று, யுவ சாகித்ய புரஸ்கார் விருது தமிழ்ப் பிரிவில் எழுத்தாளர் சபரிநாதனின் "வால்' கவிதை நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவரை, பேராசிரியர் டாக்டர் கே. பஞ்சாங்கம், டாக்டர் கே.எஸ். சுப்ரமணியன், டாக்டர் ஆர். குறிஞ்சிவேந்தன் ஆகியோர் கொண்ட குழு விருதுக்குப் பரிந்துரை செய்தது. சபரிநாதன் கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு தளங்களில் இயங்கி வருபவர். இவர்கள் தவிர பால புரஸ்கார் விருதுக்கு விஜய் சர்மா (டோக்ரி) நாஜி முனௌவர் (கஷ்மீரி), சஞ்சய் சௌபே (சம்ஸ்கிருதம்) உள்பட ஆறு குழந்தைகளின் கவிதை நூல்களும், கோவிந்த் சர்மா (ஹிந்தி), முகம்மது கலில் (உருது), ஸ்விமிம் நஸ்ரின் (அசாமி) உள்பட ஐந்து எழுத்தாளர்களுக்கு கதை நூல்களுக்கும், குழந்தைகள் இலக்கியத்தில் முழுப் பங்களிப்பு அளித்தமைக்காக தேவி நாச்சியப்பன் உள்பட ஐந்து எழுத்தாளர்களும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, பிற மொழிகளிலும் சிலர் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
யுவ புரஸ்கார் விருதுக்கு ஏழு கவிதை நூல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் எழுத்தாளர்கள் அனுஜ் லுகுன் (ஹிந்தி), சாகர் நஸிர் (கஷ்மீரி), அநுஜா அகாதூட்டூ (மலையாளம்) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். எழுத்தாளர்கள் தனுஜ் சோலங்கி (ஆங்கிலம்), அஜய் சோனி (குஜராத்தி), கீர்த்தி பரிஹர் (ராஜஸ்தானி) உள்பட ஆறு எழுத்தாளர்களின் சிறுகதைகள், மௌமிதா (பெங்காலி), சல்மான் அப்துஸ் சமத் (உருது) உள்பட ஐந்து எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மைதிலி மொழிக்கான பால புரஸ்கார், யுவ புரஸ்கார் விருது பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. விருது பெறுவோருக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பரிசுத்தொகை காசோலையும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. 


"குழந்தைகளுக்காக பங்களிப்பு வழங்கியமைக்குக் கிடைத்த விருது ' 

காரைக்குடி,ஜூன்14: குழந்தைகளுக்காக பங்களிப்பை வழங்கியமைக்காக கிடைத்த விருது இது என்று பாலசாகித்ய புரஸ்கார் விருது பெற்ற குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகளும், எழுத்தாளருமான காரைக்குடி தேவி நாச்சியப்பன் தெரிவித்தார்.
 தேவி நாச்சியப்பன் 22 வயதில் கோகுலம் இதழில் குழந்தைகளுக்காக எழுதத் தொடங்கியவர். சிறார் இலக்கியத்துறையில் 12 நூல்களைப் படைத்திருக்கிறார். முதுகலைத் தமிழாசிரியையான இவர் "குழந்தை இலக்கியப் பாடல்களில் உத்திகள்' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர். குழந்தைக் கவிஞர் செல்லகணபதியுடன் இணைந்து ஊர்கள் தோறும் சென்று குழந்தைகளை ஒருங்கிணைத்து அழ. வள்ளியப்பா இலக்கிய வட்டத்தின் சார்பில் கடந்த 24 ஆண்டுகளாக விழா நடத்திவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவருக்கு 2019 ஆம் ஆண்டுக்கான பால சாகித்ய புரஸ்கார் விருது கிடைத்திருக்கிறது. இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, தமிழ்ச்செம்மல் விருது, ராஜபாளையம் மணிமேகலை மன்ற விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர். 
பாலசாகித்ய புரஸ்கார் விருதுபெற்றது குறித்து தேவி நாச்சியப்பன் கூறுகையில், குழந்தைகளை ஒருங்கிணைத்து அவர்களுடைய வளர்ச்சிக்காக பங்களிப்பு வழங்கியமைக்கு இவ்விருது கிடைத்துள்ளது என்றார்.

"இளம் எழுத்தாளர்களை உருவாக்கும்' 

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையைச் சேர்ந்த சபரிநாதன் பொறியியல் பட்டதாரி. 2011-இல் "களம்-காலம்-ஆட்டம்', 2016-இல் "வால்' ஆகிய கவிதைத் தொகுப்புகளை எழுதியுள்ளார். ஸ்வீடன் நாட்டு கவிஞர் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகளை 
ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு இவர் மொழிபெயர்த்துள்ளார்.  "இதுபோன்ற விருதுகள் இளம் எழுத்தாளர்களை உருவாக்கும்' என்று சபரிநாதன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com