பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் துவக்கம்

தில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் ஞாயிறு காலை துவங்கியது.
பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் துவக்கம்

புது தில்லி: தில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அனைத்து கட்சி கூட்டம் ஞாயிறு காலை துவங்கியது.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று  நரேந்திர மோடி இரண்டாம் முறையாக மீண்டும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அதையடுத்து முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் திங்களன்று துவங்குகிறது.

இந்த கூட்டத்தொடரில் 38க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளன. காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு, முத்தலாக் தடை உள்ளிட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.

எனவே அவையை எப்படி சுமுகமுடன் கொண்டு செல்வது என்பது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த கூட்டமானது ஞாயிறு காலை தொடங்கியது.  இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  அத்துடன் சமாஜ்வாடி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவ், மேலவை பா.ஜ.க. தலைவர் தவார் சந்த் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்

அதேபோல்  இந்த கூட்டத்தொடரில் முக்கிய விவகாரங்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் மற்றும் பா.ஜ.க. நாடாளுமன்ற கட்சி நிர்வாக குழு கூட்டமும் ஞாயிறு மாலை நடைபெற உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com