மகளின் பிணத்தோடு ஒரு மாதம் தங்கியிருந்த காவல் ஆய்வாளர்  

உத்தரபிரதேசத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் ஒருவர் இறந்துபோன தனது மகளின் பிணத்தோடு ஒரு மாத காலம் தங்கியிருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
மகளின் பிணத்தோடு ஒரு மாதம் தங்கியிருந்த காவல் ஆய்வாளர்  

மிர்சாபூர்: உத்தரபிரதேசத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் ஒருவர் இறந்துபோன தனது மகளின் பிணத்தோடு ஒரு மாத காலம் தங்கியிருந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் ஹயாத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திலாவர் சித்திக்கி. ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர். இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக காவல்துறையில் அக்கமபக்கத்தினர் புகார் செய்திருந்தனர்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் அவரது எதிர்ப்பையும் மீறி வீட்டினில் நுழைந்து சோதனை நடத்திய போதுதான்,    திலாவர் இறந்துபோன தனது மகளின் பிணத்தோடு ஒரு மாத காலம் அந்த வீட்டில் தங்கியிருந்த சம்பவம் தெரிய வந்தது. அவருடன் அவரது மனைவியும் இருந்துள்ளார். பொதுவாக அவர்கள் யாருடனும் பேசாமல் தனியாகவே இருப்பார்கள் என்று அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர்.

இதுதொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஸ்வரூப் பாண்டே கூறியதாவது:

கைப்பற்றப்பட்ட திலாவரின் மகளது சடலமானது பிணக்கூறாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரு வாரங்களுக்குமுன்னரே கூட பக்கத்து வீட்டினர் புகாரின் பேரில் காவல்துறையினர் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு எதுவும் பிரச்சினை இல்லை என்று கூறி காவலர்களை அவர் திருப்பி அனுப்பி விட்டார்.

திலாவர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது போல காணப்படுகிறார். எனது மகள் இறக்கவில்லை; அவள் உயிரோடுஇருக்கிறாள்; உறங்கிக் கொண்டிருக்கிறாள்" என்றே கூறி வருகிறார்.   

பிணக்கூறாய்வின் முடிவில் சாவுக்கான காரணம் என்னால் என்பது தெரிய வரும். அதற்கு பிறகு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com