அடுத்த 2-3 தினங்களில் பருவமழையில் முன்னேற்றம்

"வாயு' புயலின் தாக்கம் குறைந்து விட்டதால், இன்னும் 2 அல்லது 3 தினங்களில் தென்மேற்கு பருவமழையில் முன்னேற்றம் ஏற்பட்டு, மீண்டும் மழை தொடங்கும் என வானிலை மையத்தினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். 
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கடல் சீற்றத்தால் கரையோரப் பகுதி வீடுகள் பாதிப்படையாமல் இருக்க மணல் மூட்டைகளைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்த உதவும் தன்னார்வ அமைப்பினர்.
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் கடல் சீற்றத்தால் கரையோரப் பகுதி வீடுகள் பாதிப்படையாமல் இருக்க மணல் மூட்டைகளைக் கொண்டு தடுப்பு ஏற்படுத்த உதவும் தன்னார்வ அமைப்பினர்.

"வாயு' புயலின் தாக்கம் குறைந்து விட்டதால், இன்னும் 2 அல்லது 3 தினங்களில் தென்மேற்கு பருவமழையில் முன்னேற்றம் ஏற்பட்டு, மீண்டும் மழை தொடங்கும் என வானிலை மையத்தினர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். 
இதுகுறித்து, இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்ததாவது: தற்போது, பருவமழை மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கிழக்கு உத்தரப்பிரதேசம், குஜராத் பகுதிகளில் பெய்யத் தொடங்கியுள்ளது. 
"வாயு' புயல் தாழ்வழுத்த நிலையாக மாறி குஜராத் மாநில கடலோரப்பகுதியை திங்கள்கிழமை மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவித்தனர். 
இந்திய வானிலை ஆய்வு மைய கூடுதல் இயக்குநர் தேவேந்திர பிரதான் கூறுகையில், அண்மையில் ஏற்பட்ட "வாயு' புயல் தாக்கம் காரணமாக, பருவமழைப் பொழிவது தடைபட்டது.  வாயு புயலின் தீவிரம் குறைந்து விட்டதால், அடுத்த 2 அல்லது 3 தினங்களில் பருவமழையில் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கிறோம் என்றார். 
இந்திய வானிலை மையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
மத்திய அரபிக்கடல், கர்நாடகம் மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளது. பருவமழை தீவிரமடைந்தால், மத்திய, வடக்கு மற்றும் தெற்கே வங்காள விரிகுடா பகுதியிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், வடக்கு வங்காளப்பகுதி மற்றும் சிக்கிம் மாநிலங்களில் 1 அல்லது 2 தினங்களில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறையும் பருவமழை: தற்போதைய நிலைப்படி, நாடு முழுவதும் இந்த ஆண்டில் 43 % வரை பருவமழைப்பொழிவு குறைய வாய்ப்புள்ளது. மத்தியப் பிரதேசம், ஒடிஸா, சத்தீஸ்கர், மகாராஷ்டிரம் மற்றும் கோவா மாநிலங்களில் 59 % வரை பருவமழை குறையும் அபாயம் உள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் 47 % பருவமழை குறையும். 
மேற்கு மற்றும் கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் முறையே 75, 75 மற்றும் 72 சதவீதம் வரை மழைப்பொழிவு குறைந்து விடும். விதர்பா பகுதியில் 87 % வரை பருவ மழை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தென்னிந்திய மாநிலங்களிலும், மகாராஷ்டிர மாநிலத்திலும் உள்ள நீர்த்தேக்க அணைகளில் கடந்த 10 ஆண்டுகளில் இருந்த சராசரி அளவை விட நீர்மட்டம் குறைந்து உள்ளதாக ஏற்கெனவே மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. 
நாடு முழுவதும் நீடித்து வரும் கடுமையான வறட்சியால், அனல்காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக, கிழக்கு மாநிலங்களான ஜார்க்கண்ட், பிகார் மற்றும் ஒடிஸா மாநிலங்கள் கடும் வெப்பத்தின் பிடியில் சிக்கியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com