பொதுத் துறை வங்கிகளின் மூலதன தேவை: பட்ஜெட்டில் ரூ.30,000 கோடி ஒதுக்கீடு?

மத்திய நிதி அமைச்சகம், பொதுத் துறை வங்கிகளுக்கு தேவைப்படும் மூலதனத்தை மதிப்பீடு செய்துள்ளது. இதையடுத்து, வரும் பட்ஜெட்டில் அவ்வங்கிகளுக்கு ரூ.30,000 கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத் துறை வங்கிகளின் மூலதன தேவை: பட்ஜெட்டில் ரூ.30,000 கோடி ஒதுக்கீடு?

மத்திய நிதி அமைச்சகம், பொதுத் துறை வங்கிகளுக்கு தேவைப்படும் மூலதனத்தை மதிப்பீடு செய்துள்ளது. இதையடுத்து, வரும் பட்ஜெட்டில் அவ்வங்கிகளுக்கு ரூ.30,000 கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட் ஜூலை 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. 
2018-19 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 5-ஆண்டுகள் காணாத குறைந்தபட்ச அளவாக 6.8 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ள நிலையில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
இந்த நிலையில், பொதுத் துறை வங்கிகளின் மூலதனத் தேவை எவ்வளவு என்பது குறித்து மத்திய நிதி அமைச்சகம் மதிப்பீடு செய்துள்ளது. இதையடுத்து, அந்த வங்கிகளின் குறைந்தபட்ச மூலதன ஒழுங்காற்று விதிமுறைகளை நிறைவு செய்யும் வகையில் பட்ஜெட்டில் ரூ.30,000 கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், வங்கிகளின் கடன் வழங்கல் நடவடிக்கைகள் அதிகரித்து பொருளாதரா வளர்ச்சி வேகமெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர, பேங்க் ஆஃப் பரோடா வங்கியுடன் தேனா வங்கி, விஜயா வங்கி ஆகியவற்றை இணைத்தது போன்று மற்றொரு இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளும் நிலையில் வங்கிகளுக்கு கூடுதல் மூலதனம் தேவைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இணைப்பு நடவடிக்கைகளின் காரணமாக, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவை எதிர்கொள்ளும் கூடுதல் செலவினங்களை சமாளிக்க பேங்க் ஆஃப் பரோடாவுக்கு மத்திய அரசு மூலதனத்தை அதிகரிப்பதற்காக  ரூ.5,042 கோடி வழங்கியதை அந்த தகவல்கள் சுட்டிக் காட்டுகின்றன.
மத்திய அரசு, கடந்த 2018 டிசம்பரில் ரூ.65,000 கோடி மூலதனத்தை வங்கிகளுக்கு வழங்கியது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2018-19 முழு நிதியாண்டில் மத்திய அரசு சாதனை அளவாக ரூ.1,06,000 கோடி மூலதனத்தை பொதுத் துறை வங்கிகளுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com