மக்களவையில் இன்று: தமிழில் பதவிப் பிரமாணம் செய்த தமிழக எம்.பி.க்கள்!

17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் தொடர்ந்து பதவியேற்று வருகிறார்கள்.
மக்களவையில் இன்று: தமிழில் பதவிப் பிரமாணம் செய்த தமிழக எம்.பி.க்கள்!


புது தில்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் தொடர்ந்து பதவியேற்று வருகிறார்கள்.

இரண்டாவது நாளான இன்று தமிழகத்தைச் சேர்ந்த திமுக மற்றும் கூட்டணிக்கட்சி எம்பிக்கள் 37 பேர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

திமுக கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த 37 உறுப்பினர்களும் ஒருவர் பின் ஒருவராக வந்து தமிழில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

டி.ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், ஜோதிமணி, திருமாவளவன், ராமலிங்கம், ஜி. செல்வம், பழனிமாணிக்கம், செந்தில்குமார், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராச்சாமி உள்ளிட்டோர் தமிழில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

ஒவ்வொருவரது பெயராக அழைப்பு விடுக்க விடுக்க, அவையின் முன் பகுதிக்கு வந்த உறுப்பினர்கள், "மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள நான் .. சட்டப்பூர்வமாக நிருவப்பட்டுள்ள இந்திய அரசியலமைப்பின் உண்மையான நம்பிக்கையும் பற்றுதலும் கொண்டிருப்பேன் என்றும்,
இந்திய நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவேன் என்றும், நான் மேற்கொள்ளவிருக்கும் கடமையை நேர்மையாக நடத்துவேன் என்றும் உளமார உறுதிக் கூறுகின்றேன்" என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு, கையெழுத்திட்டனர்.

மத்திய சென்னை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட தயாநிதி மாறன் பதவியேற்புக்குப் பிறகு தமிழ் வாழ்க, பெரியார் வாழ்க, கலைஞர் வாழ்க என்று கோஷமிட்டார்.

தருமபுரி எம்.பி. செந்தில்குமார் கருப்புச் சட்டை அணிந்து வந்து திராவிடம் வாழ்க என்று கூறி பதவியேற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com