பாஜகவில் இணைந்த திரிணமூல் எம்எல்ஏ, 16 கவுன்சிலர்கள்

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த ஒரு எம்எல்ஏ மற்றும் 16 கவுன்சிலர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் திங்கள்கிழமை


மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை சேர்ந்த ஒரு எம்எல்ஏ மற்றும் 16 கவுன்சிலர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் திங்கள்கிழமை இணைந்தனர். 
திரிணமூல் காங்கிரஸின் நெளபாரா தொகுதி எம்எல்ஏ சுனில் சிங் மற்றும் 15 திரிணமூல் கவுன்சிலர்களும், 1 காங்கிரஸ் கவுன்சிலரும் பாஜகவின் பொதுச் செயலாளர் மற்றும் மேற்கு வங்க பாஜக பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா மற்றும் மூத்த தலைவர் முகுல் ராய் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். 
சுனில் சிங், அர்ஜுன் சிங் எம்.பி.யின் உறவினர் ஆவார். அர்ஜுன் சிங் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரக்பூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் கூறுகையில், மேற்கு வங்க முதல்வர் மம்தாவின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்து, அக்கட்சியில் இருந்து இதுவரை 10 எம்எல்ஏக்கள் விலகி பாஜகவில் இணைந்துள்ளனர் என்று தெரிவித்தார். 
பாஜக பொதுச் செயலாளர் விஜய்வர்கியா கூறியதாவது: மேற்கு வங்க அரசியலில் பாஜக ஒரு வலுவான கட்சியாக உருவெடுத்து வருகிறது. மாநிலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பாஜக முன்னுரிமை அளிக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com